சிம்பு, விஷாலை கழட்டிவிட்ட 3 நடிகைகள்.. வெளிநாட்டு மாப்பிள்ளைகளை கரம் பிடித்த மருமகள்கள்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு பின்னர் திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள். அப்படி பல நடிகைகள், நடிகர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் என காதலித்து திருமணம் செய்து கொண்டதுண்டு. ஆனால் சில நடிகைகள் இங்குள்ள பிரபலங்களை மறந்துவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து செட்டில் ஆகி உள்ளனர்.

அப்படி வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்டு தனது வலைத்தள பக்கத்தில் குடும்பத்துடன் புகைப்படங்களை வெளியிட்டு இங்குள்ள சிம்பு, விஷாலை வெறுப்பேத்தி உள்ள மூன்று நடிகைகளைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

Also read: வசூலில் சிம்பு, சிவகார்த்திகேயனை தூக்கி சாப்பிட்ட லவ் டுடே பிரதீப்.. அடுத்த டார்கெட் லோகேஷன் கைதியாம்

இலியானா: தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை இலியானா கடந்த 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞரான ஆண்ட்ரீவ் நீபோன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் எல்லாம் நாங்கள் செய்து கொள்ளவில்லை என்று கதை கட்டினாலும் இலியானா அவருடன் வாழ்ந்து வந்தது உண்மைதான் என கூறினார். தற்போது இலியானா ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிச்சா கங்கோபாத்யாய்: தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் தமிழில் நடிகர் சிம்புவுடன் ஒஸ்தி, தனுஷுடன் மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர். டெல்லியில் பிறந்திருந்தாலும் சிறுவயதிலிருந்தே அமெரிக்காவில் வாழ்ந்து வந்ததால் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர். இவர் தனது சிறுவயதில் இருந்து தன்னுடன் அமெரிக்காவில் படித்த ஜோ லங்கெல்லா என்ற தொழிலதிபரை ரிச்சா கங்கோபாத்யாய் காதலித்து திருமணம் செய்துகொண்டு தற்போது ஒரு மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

Also read: வேதாளம் போல் மீண்டும் முருங்கை மரம் ஏறிய சிம்பு.. பழைய அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுத்த எஸ்டிஆர்

ஸ்ரேயா சரண்: தமிழ்,தெலுகு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சூப்பர்ஸ்டார் முதல் தளபதி வரை ஜோடி சேர்ந்து நடித்து கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷிரயா ஷரன்.இவர் 2018 ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரீவ் கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவரது திருமணம் ஹிந்து முறைப்படியும், கிறிஸ்துவ முறைப்படியும் கோலாகலமாக இந்தியாவில் நடைபெற்றது. இத்தம்பதிகளுக்கு மகள் உள்ள நிலையில் ஷிரயா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.

Also read: தானாக வந்து வலையில் சிக்கிய ஆடு.. பெரும் தொகையை கறக்க விஷால் போடும் பிளான்