சிரிச்சு சிரிச்சே ரசிகர்களை சொக்க வைத்த நடிகை இப்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார். எங்கு திரும்பினாலும் இவர் பற்றிய பேச்சாகத்தான் கிடக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடித்துள்ள படம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.
ஏனென்றால் நடிகை ஏற்கனவே கவர்ச்சி விஷயத்தில் எந்த லிமிட்டும் வைத்துக் கொள்வது கிடையாது. அதிலும் இப்போது அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வருவதால் கல்லா பெட்டியை நிரப்புவதற்காக ஆஃபர்களை தாராளமாக வாரி வழங்கி கொண்டிருக்கிறாராம்.
அதனாலேயே தற்போது நடித்திருக்கும் படத்தில் லிப் லாக், படுக்கையறை போன்ற காட்சிகளில் அவர் கூச்சப்படாமல் நடித்துள்ளார் என அதிர்ச்சி தகவல் பரவி வருகிறது. அதிலும் லிப் லாக் காட்சி மட்டும் ஏகப்பட்ட டேக்குகள் வாங்கியதாம். இருந்தாலும் அம்மணி மறுப்பேச்சு பேசாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் உச்சி குளிர்ந்து போன தயாரிப்பாளர் கேட்டதற்கும் மேலாகவே சம்பளத்தை கொடுத்து விட்டாராம். இப்படி கையில காசு, வாயில கிஸ்சு என அக்கப்போர் கூட்டி வரும் நடிகையின் இந்த போக்கை பார்த்து அவருடைய காதலர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வருகிறாராம்.
இந்த மாதிரி உச்சகட்ட கவர்ச்சி எல்லாம் என்னுடன் நடிக்கும் போது மட்டும் வைத்துக் கொள் என அவர் அறிவுரை கூறியும் நடிகை அதை கேட்கும் நிலையில் இல்லை. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதால் நடிகை வாய்ப்பு வரும் போதே சொத்துக்களை வாரிக் குவிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
அதனால் இனிமேல் அம்மணியின் கவர்ச்சி தரிசனம் ஒவ்வொரு படத்திற்கும் அதிகமாகும் என்கிறது திரையுலக வட்டாரம். இப்படியே போனால் போட்டி நடிகைகள் எல்லாம் பொட்டியை கட்டிக்கொண்டு கிளம்பி விட வேண்டியதுதான். அந்த அளவுக்கு அனைத்து வாய்ப்புகளையும் சொந்தமாக்கி பிஸியாகி வருகிறார் இந்த நடிகை.