அரசியலுக்கு அடி போடும் விஜய்.. புரட்சித்தலைவியாக மாற துடிக்கும் நடிகை

நடிகை அரசியல் வருவதற்கு தளபதி விஜய் உதவி வருவதாக தகவல் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த நடிகையும், தளபதி விஜய் ஜோடி சேர்ந்து நடித்த பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்துள்ளன. இதனிடையே அவரும் தளபதி விஜயும் தமிழ் சினிமாவின் வெற்றி ஜோடி என்ற பெயரும் இன்றுவரை உள்ளது .

உதாரணமாக குருவி, கில்லி, திருப்பாச்சி உள்ளிட்ட ஹிப் திரைப்படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடித்ததனால் அவரது மார்க்கெட் எகிறியது என்று சொல்லலாம். இந்நிலையில் சமீபத்தில் நடிகை த்ரிஷா அரசியலில் களம் இறங்கப் போவதாகவும், காங்கிரஸ் கட்சியில் இணையுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இதனிடையே தளபதி விஜய்யின் பரிந்துரையின் பெயரிலேயே திரிஷா அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது . தளபதி விஜய் தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் மும்முரமாக களம் இறங்க ஆயத்தமாகி வருகிறார்.இதற்காக பல அரசியல் கட்சி தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் வருங்காலத்தில் தனது தோழியும், நடிகையுமான த்ரிஷாவை தனது கட்சியில் இணைக்க தளபதி விஜய் முடிவெடுத்துள்ளாராம். மேலும் திரிஷா அவரது கட்சிக்கு வருவதற்கு முன்பாகவே மக்கள் எப்படி த்ரிஷாவை அரசியலுக்கு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை பார்த்து விட்டு தன் கட்சியில் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.எப்படி ஜெயலலிதாவை அரசியலில் இணைத்து பொதுச்செயலாளர் பதவியை கொடுத்து கட்சியை வழிநடத்தினாரோ, அதே போல த்ரிஷாவிற்கு, விஜய் மக்கள் இயக்கம் கட்சியில் பொதுச்செயலர் பதவி கொடுத்து த்ரிஷாவுடன் சேர்ந்து கட்சியை தளபதி விஜய் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தியும் , தளபதி விஜயும் நீண்ட கால நண்பர்கள் என்பதால் த்ரிஷாவை அக்கட்சியில் இணைய வைத்து விஜய் பரிந்துரை செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் திரைப்படங்களில் வெற்றிகண்டது போல அரசியலிலும் திரிஷா, விஜய் ஜோடி வெற்றிகாணுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.