உடல் எடையை தாறுமாறாக குறைத்த 8 முன்னணி நடிகைகள்.. புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

சினிமாவுக்கு வந்த புதிதில் கொழுக் மொழுக் தேகத்தால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகைகள் பிறகு தங்களது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு பிடிக்காமல் சினிமாவில் வாய்ப்பும் கிடைக்காமல் அல்லல்பட்டு வரும் லிஸ்டை பார்ப்போம்.

கீர்த்தி சுரேஷ்

actress-keerthisuresh-slim-cinemapettai
actress-keerthisuresh-slim-cinemapettai

தன்னுடைய அழகான முக வசீகரத்தாலும் தரும் கொழுக் மொழுக் தேகத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் கீர்த்தி சுரேஷ். அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக இந்திப்பட வாய்ப்பை நம்பி உடல் எடையை குறைத்து தற்போது பட வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.

ஹன்சிகா மோத்வானி

actress-hansika-slim-cinemapettai
actress-hansika-slim-cinemapettai

இளைஞர்களின் செல்லக்குட்டியாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி உடல் எடையை குறைத்து நோய் வந்ததை போலானது அவரின் பட வாய்ப்புகளுக்கு வேட்டு வைத்துள்ளது. உடம்பைக் குறைக்கிறேன் என வத்தலும் தொத்தலுமாக மாறியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை போல.

காதல் சந்தியா

actress-sandhiya-slim-cinemapettai
actress-sandhiya-slim-cinemapettai

காதல் படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் தான் சந்தியா. ஒரு கட்டத்தில் சினிமாவில் சம்பாதித்த பணத்தின் மூலம் பூரித்துப்போனதால் உடல் எடை ஏறியது. அப்போது வெறுத்த ரசிகர்கள் உடல் எடையை குறைத்தும் கண்டு கொள்ளாததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

பாவனா

actress-bhavana-slim-cinemapettai
actress-bhavana-slim-cinemapettai

கேரளத்து வரவான பாவனா சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். சினிமாவில் ஏற்பட்ட கசப்பான சூழ்நிலையால் படங்களில் நடிக்காமல் தற்போது உடல் எடையை கூட்டி விட்டார். இதனால் பயந்து கொண்டு அவசர அவசரமாக உடல் எடையை குறைத்தும் அவருக்கு படவாய்ப்புகள் திரும்ப வரவில்லை.

தாமிரபரணி பானு

actress-bhanu-slim-cinemapettai
actress-bhanu-slim-cinemapettai

முதல் படத்திலேயே நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு அழகில் சொக்க வைத்தவர் பானு. அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் உடல் எடையை கூடியதாக கருதி உடனடியாக குறைத்தார். ஆனால் அதன்பிறகு சந்தானத்துடன் ஜோடி போடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

மஞ்சிமா மோகன்

actress-manjuna-mohan-slim-cinemapettai
actress-manjuna-mohan-slim-cinemapettai

அடுத்ததாக மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதால் தனது உடல் எடையை குறைக்க போராடி வருகிறாராம். ஆனால் அப்படி செய்தால் படவாய்ப்புகள் வராது என பலரும் அட்வைஸ் செய்வதால் கொஞ்சமாக உடல் எடையை குறைக்க உள்ளாராம்.

நமீதா

நமீதா இஷ்டத்துக்கு உடம்பை குறைத்து பின்பு வாய்ப்பு இல்லாமல் திருமணம் செய்து போய்விட்டார்.

actress-namitha-slim-cinemapettai
actress-namitha-slim-cinemapettai

வித்யுலேகா ராமன்

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமா நகைச்சுவை நாயகியாக அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே தனக்கென ஒரு முத்திரையை பதித்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் நடிகை வித்யூலேகா.

தற்போது கிண்டல் செய்தவர்கள் அனைவரும் மூக்கின்மேல் விரலை வைக்கும் படி தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து வேற லெவல் அழகில் புகைப்படத்தை வெளியிட்டு தெறிக்க விட்டுள்ளார் வித்யூலேகா.

vidhyuleka-raman-latest-photo
vidhyuleka-raman-latest-photo
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்