விக்ரமை மொத்தமாக ஏமாற்றிய பா ரஞ்சித்.. தங்கலான் படத்திற்கு போட்ட உழைப்பெல்லாம் வேஸ்ட்

Vikram – Thangalaan: நடிகர் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் வரும் குடியரசு தினத்தன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. கோலார் தங்க வயலில் வேலை செய்த தமிழர்களின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. விக்ரம், ரஞ்சித் கூட்டணி சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் நிலையில் எல்லாத்தையும் புஸ் என ஆக்கியிருக்கிறது சமீபத்தில் வெளியான செய்தி.

விக்ரம் தமிழ் சினிமாவில் அதிக உழைப்பை போட்டு நடிக்கும் நடிகர்களில் ஒருவர். அதிலும் இந்த தங்கலான் படத்திற்காக ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார். இந்த படம் சுதந்திரத்திற்கு முன்பாக நடந்த கதை என்பதால் அந்த காலத்தில் இருந்த மனிதர்களைப் போல படத்தில் நடிக்கும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் மேக்கப் போடுவதற்கு என்று 50 மேக்கப் ஆர்டிஸ்ட்கள் வேலை செய்து இருக்கிறார்கள்.

தங்கலான் படத்திற்காக விக்ரம் கிட்டத்தட்ட தினமும் 20 மணி நேரம் வேலை செய்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரமுக்கு விபத்து ஏற்பட்டது கூட எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்படி இயக்குனர் பா ரஞ்சித்தை நம்பி தன்னுடைய மொத்த உழைப்பையும் போட்ட விக்ரமுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது.

தங்கலான் படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை என செய்திகள் வெளியாகி இருக்கிறது அதாவது இந்த படம் எல்லா தரப்பட்ட மக்களும் புரிந்து கொண்டு பார்க்கும் கதை அம்சத்தில் இல்லையாம். இது முழுக்க முழுக்க விருதுக்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. அதனாலேயே பிரபல டிவி நிறுவனம் இந்த படத்தை ரிஜெக்ட் செய்திருக்கிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரிஜெக்ட் ஆகி இருப்பது விக்ரம் மற்றும் ரஞ்சத்திற்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. தங்கலான் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்தில் சில மாற்றங்களை படக்குழு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஒரு சில படங்கள் விருதுக்காக என எடுக்கப்படும் பொழுது வணிக ரீதியாக தோல்வியை அடைவது தமிழ் சினிமாவில் அதிகமாக நடந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சாமானிய மக்களுக்கு அந்த கதை புரியாமல் இருப்பது தான். அப்படி ஒரு குழப்பத்தை தான் தங்கலான் படத்தின் கதை ஏற்படுத்தி இருக்கும் என தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்