யூடியூப் வருமானத்தை தாண்டி வனிதா செய்யும் தொழில்.. பிக்பாஸ் வத்திக்குச்சியின் மறுபக்கம்

Vanitha Vijayakumar: வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும், அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்று பழமொழி சொல்வார்கள் அது வனிதா விஜயகுமாருக்கு தான் சரியாகப் பொருந்தும். வனிதா தனக்கான அடையாளத்தை தேடிக்கொண்டது சர்ச்சைகளை வைத்து தான். தன்னுடைய அப்பா அம்மா மற்றும் உடன் பிறந்தவர்களிடமிருந்த கருத்து வேறுபாட்டை மீடியாவுக்கு வந்து பேசி அந்த மொத்த குடும்பத்தையே சந்தி சிரிக்க வைத்தது தான் வனிதாவுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க காரணம்.

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட அவர் கொடுத்த அலப்பறைகள் தான் இன்று வரை யூட்யூபில் வருமானமாக வந்து கொண்டிருக்கிறது. வனிதா ஆரம்பத்திலிருந்து சர்ச்சைகளால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால் அவருடைய சில நல்ல விஷயங்கள் வெளியில் தெரியாமல் இருக்கிறது அதில் ஒன்றுதான் அவர் சொந்த தொழில் நடத்தி வரும் விஷயமும்.

நடிகை வனிதா விஜயகுமார் சென்னை நுங்கம்பாக்கத்தில் சொந்தமாக துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஆடைகள் மட்டுமில்லாமல் அலங்காரம், மேக்கப் பொருட்கள் கூட இந்த கடையில் விற்பனை செய்யப்படுகிறது. விவி ஸ்டைலிஷ் என்னும் பெயரில் இந்த கடை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடையில் இருக்கும் ஆடைகள் எல்லாமே வனிதா விஜயகுமார் டிசைன் செய்வது ஆகும்.

Vv stylishing 1
Vv stylishing 1

நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு பேஷன் டெக்னாலஜி படிப்பில் அட்வான்ஸ் டிப்ளமோ முடித்திருக்கிறார் மேலும் அவருடைய தங்கை ப்ரீத்தா நடிக்கும் படங்களுக்கு எல்லாம் அவர்தான் டிசைனிங் செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் பி வாசுவின் நிறைய படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

Vv stylishing 2
Vv stylishing 2

வனிதா விஜயகுமார் அவரே சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருவதோடு நிறைய யூடியூப் சேனல்களுக்கு கன்டென்ட் கொடுக்கும் வகையில் பேட்டியும் கொடுத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய சொந்தத் தொழிலான வி வி ஸ்டைலிஷ் கடை மூலம் மாதந்தோறும் லட்ச கணக்கிலும் வருமானம் பார்த்து வருகிறார்.

VV stylishing 3
VV stylishing 3