நயன்தாராவையே ஓவர்டேக் செய்த சின்னத்திரை நயன்தாரா.. கைவசம் இத்தனை படங்களா!

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்னும் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். பார்ப்பதற்கு நயன்தாரா போன்ற சாயலில் இருப்பதால் அவர் ரசிகர்களால் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டார்.

தெய்வமகள் சீரியலில் அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து வெள்ளித் திரையில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்னும் திரைப்படத்தில் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவருக்கு தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது. இதில் விக்ரம், சசிகுமார் உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் இருக்கிறது. விக்ரமுடன் இவர் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயுமொளி நீ எனக்கு, தாழ் திறவாய், ஊர்க்குருவி, காசிமேடு போன்ற திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். மேலும் அவர் நடிகர் பரத்துடன் பெயரிடப்படாத ஒரு திகில் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதுதவிர சமுத்திரகனியின் திரைப்படம் மற்றும் சிம்பு நடிக்கும் படம் போன்றவற்றிலும் இவர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆக மொத்தம் வாணி போஜன் இப்பவே எட்டுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது இன்னும் அதிகம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சின்னத்திரையில் இருந்து வந்த ஒரு நடிகை தற்போது படு பிஸியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழில் முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்கு கூட இத்தனை பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சொல்லப்போனால் ஒரிஜினல் நயன்தாராவுக்கே தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என்று அனைத்து மொழிகளும் சேர்த்து ஆறு படங்கள் தான் கைவசம் இருக்கிறது. ஆனால் இந்த சின்னத்திரை நயன்தாராவுக்கு தமிழில் மட்டுமே ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. இந்த 2022ஆம் ஆண்டு இந்த சின்ன நயன்தாராவின் ஆண்டு போல.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை