5 வருஷத்துக்கு பக்கத்துல வராதீங்கன்னு விரட்டும் திரிஷா.. நான் தான் லேடி சூப்பர் ஸ்டார்னு நிரூபித்த மாமி

Trisha Upcoming Movies: திண்ணையில கடந்தவனுக்கு திடீர்னு அடிச்சதாம் அதிர்ஷ்டம் என்று சொல்லுவாங்க. அப்படித்தான் இப்போ த்ரிஷாவோட சினிமா கேரியரும் மாறிவிட்டது.

கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட் ஆக வேண்டிய நடிகை, பொன்னியின் செல்வனால் இப்போ லேடி சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார். அடுத்த அஞ்சு வருஷத்துக்கு மேடம் பயங்கர பிசி. அவங்க கைவசம் மட்டும் 12 படங்கள் இருக்கிறது. அந்த படத்தின் விவரங்களை பற்றி பார்க்கலாம்.

தக் லைஃப்: மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து இணையும் படம் தான் தக் லைப். இந்த படத்தில் திரிஷா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தேர்தல் முடிந்த பிறகு கமலஹாசன் இந்த படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் என தொடங்கப்பட்ட இந்த படத்தில் தற்போது இவர்கள் இருவருமே விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

விடாமுயற்சி: நடிகர் விஜயுடன் லியோ படத்தில் நடித்த பிறகு த்ரிஷா அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் கைகோர்த்தார். கிரீடம், மங்காத்தா படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறை விடாமுயற்சி படத்தில் இணைந்திருக்கிறது.

GOAT: விஜய் நடிக்கும் GOAT படத்தில் ஏற்கனவே சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஏகப்பட்ட கதாநாயகிகள் இருக்கிறார்கள். இதற்கு இடையில் த்ரிஷா இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

விஸ்வம்பரா: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 156 வது படம் தான் விஸ்வம்பரா. இந்த படத்தில் திரிஷா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் ஆக இந்த படம் வெளியாகும்.

ஐடென்டி: மலையாள உலகின் வெற்றி ஹீரோ டோவினோ தாமசுடன் திரிஷா இணைந்திருக்கும் படம் தான் ஐடென்டி. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது.

ராம்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து த்ரிஷா நடிக்கும் படம் தான் ராம். இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

தி புல்: நயன்தாராவை அடுத்து த்ரிஷா சல்மான் கான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்குள் நுழைகிறார். தி புல் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை கரன் ஜோகர் இயக்குகிறார்.

கர்ஜனை: இயக்குனர் சுந்தர் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் படம் தான் கர்ஜனை. காதல் மற்றும் அதிரடி ஆக்சன் நிறைந்த இந்த படத்தில் அவருடன் இணைந்து சின்னத்திரை நடிகர் அமித் பர்கவ் நடிக்கிறார்.

பிருந்தா: புலன் விசாரணையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் வலைத்தொடர் தான் பிருந்தா. இதில் த்ரிஷா முக்கியமான கேரக்டரில், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரனுடன் இணைந்து நடிக்கிறார்.

1818: ரித்துன் சாகர் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் படம் தான் 1818. மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் நடிகர் ரமேஷ் திலக்கும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

டகுபதி வெங்கடேஷ் – த்ரிஷா: தெலுங்கு இயக்குனர் ரவிபுடி இயக்கத்தில் திரிஷா ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தின் ஹீரோ டகுபதி வெங்கடேஷ் ஆவார்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்