ஐஸ்வர்யா ராயும் இல்ல, நயன்தாராவும் இல்ல.. அஜித்க்கு 5ம் முறையாக ஜோடியாகும் இளவரசி

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித் மூன்றாவது முறையாக ஹெச் வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

துணிவு படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கிய போதே நடிகர் அஜித்தின் 62 வது படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகின. துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது விக்னேஷ் சிவன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. காத்துவாக்குல இரண்டு காதல் படத்திற்கு விக்னேஷ் சிவன் இயக்கப்போகும் படம் இதுவாகும்.

Also Read: வாரிசு படத்திற்கு போட்டியாக துணிவுடன் வரும் உதயநிதி.. கலெக்ஷன் பயத்தில் இருக்கும் தியேட்டர் அதிபர்கள்

விக்னேஷ் சிவன் இயக்கம் என்பதால் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. பின் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அஜித்தின் 62 வது படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. த்ரிஷா அடுத்து நடிகர் விஜயுடனும் சேர்ந்து ஒரு படம் பண்ண இருக்கிறார்.

அஜித்தும், த்ரிஷாவும் இணைந்து ஏற்கனவே ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் என நான்கு வெற்றி படங்களில் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தில் இருவரும் ஐந்தாவது முறையாக இணைகின்றனர். பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவுக்கு ஒரு நல்ல கம்பேக்கை கொடுத்து இருக்கிறது என்று அவருக்கு அமையும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளிலேயே தெரிகிறது.

Also Read: அஜித், விஜய், விக்ரம் என கலக்கிய இயக்குனர்.. ஒரு வெற்றிப் படத்திற்காக 15 வருடம் போராடும் அவலம்

ஏ கே 62 ஆக்சன் கலந்த த்ரில்லருடன், விக்னேஷ் சிவனுக்கே உரித்தான காமெடியுடன் இருக்கும். இந்த படம் ஒரு மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. லைக்கா ப்ரொடக்சன் படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். அஜித்குமார்-விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்கள் மற்றும் பாலிவுட் ஸ்டார்களும் இந்த படத்தில் இணைய இருக்கிறார்கள். துணிவு படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் AK 62 வின் அப்டேட் இன்னும் சில வாரங்களில் வெளிவரலாம்.

Also Read: ஒரு பக்கம் அதிர்ச்சி, மறுபக்கம் தளபதி மகிழ்ச்சி.. ஜவ்வாக இழுத்துக் கொண்டு போகும் அஜித் பட இயக்குனர்

- Advertisement -