வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

7 வருடங்கள் ஆகியும் மறக்கவில்லை.. உருகிப்போய் ட்வீட் போட்ட தமன்னா

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்ற பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா. வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போன்று பளபளவென இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதனால் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் இவர் சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக இவர் தமிழில் ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு மூன்று வருடங்கள் கடந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவை தவிர்த்து விட்டு தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் இவரை ரசிகர்கள் இன்னும் மறக்காமல் இருக்கின்றனர்.

அதற்கு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் குறித்து தமன்னா நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார். அதாவது தமன்னா மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற பாகுபலி திரைப்படத்தில் அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த அப்படம் உலக மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து சாதனை புரிந்தது.

அதை குறிப்பிட்டுள்ள தமன்னா இப்படம் வெளிவந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னும் மக்கள் இன்னும் அந்த அவந்திகா கதாபாத்திரத்தை மறக்கவில்லை. இப்போது கூட என்னை பார்ப்பவர்கள் அவந்திகா என்று அழைக்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

உலகம் முழுவதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்படத்தில் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் உருகிப் போய் கூறி இருக்கிறார். அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் தமிழில் படம் நடிக்க வேண்டும் என்று அவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வரும் தமன்னா விரைவில் தமிழிலும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News