சொந்தத் தொழிலில் கல்லா கட்டும் மில்க் பியூட்டி.. அடேங்கப்பா! தமன்னா தொடங்கி இருக்கும் பிசினஸ் இதுதானா?

Tamannah Own Business: சமீபத்தில் தன்னுடைய கிளாமர் நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் அதிர வைத்தார் தமன்னா. ஆரம்ப காலகட்டத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைக்க கொஞ்சம் தவறினாலும், தட்டு தடுமாறி தனக்கென ஒரு அடையாளத்தை பெற்ற இவர் அடுத்தடுத்து விஜய், அஜித், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் கைகோர்த்து படங்கள் நடிக்க ஆரம்பித்து நம்பர் ஒன் ஹீரோயின் ஆக வலம் வந்தார்.

ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காமல் தமன்னா மார்க்கெட்டை இழந்துவிட்டார். இனி சம்பாதிப்பதற்கு இதுதான் வழி என கவர்ச்சியை தன் கையில் எடுத்தார். சமீபத்தில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்தின் காவலா பாடலில் ஆடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் தமன்னா. அட, கல்லூரி மற்றும் தர்மதுரை படங்களின் நடித்த நம்ம தமன்னாவா இது என சினிமா ரசிகர்கள் மூக்கின் மேல் விரல் வைத்தார்கள்.

Wite & Gold 1
Wite & Gold 1

தமன்னா சமீபத்தில் சொந்த தொழில் ஒன்று தொடங்கி இருக்கிறார். பொதுவாக பிரபலங்கள் ஹோட்டல், ஆடைகள் என பிசினஸ் தொடங்கி கொண்டிருக்கும்போது தமன்னா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வைர நகைக்கடை ஒன்றை தொடங்கியிருக்கிறார். வைட் அண்ட் கோல்டு என பெயரிடப்பட்டிருக்கும் அந்த கடையின் வியாபாரம் ஆன்லைனில் மிகப்பெரிய அளவில் தன்னுடைய பிசினஸை ஆரம்பித்திருக்கிறது.

Wite & gold 2
Wite & gold 2

ஒரு பக்கம் தமன்னா தன்னுடைய கவர்ச்சியின் மூலம் கோடி கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அவருடைய பிசினஸ் மூலம் மாதம் அவருக்கு டபுள் டிஜிட்டில் லட்சக்கணக்கில் லாபம் வருகிறது. வருடக் கணக்கில் லாபத்தை கணக்கிட்டுப் பார்த்தால் அது கோடியை தாண்டும். தமன்னாவின் இந்த வைட் அண்ட் கோல்டு வைரக்கடை மும்பையில் செயல்பட்டு வருகிறது.

wite & gold 3
wite & gold 3