அனபெல்லின் பள்ளிப்பருவ புகைப்படம்! ஆளே அடையாளம் தெரியலையே!

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ஆடுகளம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாப்ஸி. அதன் பிறகு அஜித்துடன் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா-2 போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

தமிழிலிருந்து அப்படியே தெலுங்கிற்கு சென்ற டாப்ஸி அங்கேயே செட்டிலாகிவிட்டார். தொடர்ந்து அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பட வாய்ப்புகள் குவிய ஒரு ஹிந்தி பட வாய்ப்பு இடையில் நுழைந்தது.

அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.முக்கியமாக டாப்ஸி நடிக்கும் அனைத்து படங்களும் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அனபெல் சேதுபதி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த டாப்ஸி, இந்தப் படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.

taapsee-school-photo
taapsee-school-photo

இந்த படத்தில் டாப்ஸி, பார்பி டால் போலவே செம க்யூட்டாக காட்டப்பட்டிருந்தார். இந்நிலையில் டாப்ஸி தனது பள்ளிப்பருவத்தில் எடுத்திருக்கும் புகைப்படத்தை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ‘அனபெல்லா இது? ஆளை அடையாளம் தெரியலை!’ என்று ஆச்சரியத்தில் உள்ளனர். அத்துடன் இந்த புகைப்படத்தை அவருடைய ரசிகர்கள் வியப்புடன் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்