காதல் தோல்வி, விவாகரத்து, தகாத உறவு.. மறைக்கப்பட்ட ஸ்ரீவித்யாவின் அந்தரங்க வாழ்க்கை

Srividya: கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருப்பது கமல் மற்றும் ஸ்ரீவித்யாவின் நிறைவேறாத காதல் கதை தான். ஸ்ரீவித்யா மலையாள பேட்டி ஒன்றில் கமலுடன் இருந்த காதல் முடிவை பற்றிய காரணத்தை சொல்ல, மற்றொரு பக்கம் தமிழ் சேனல் ஒன்றில் கமல் தன்னுடைய முதல் காதலி என ஸ்ரீவித்யாவை குறிப்பிட்டது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இருவரது உறவுகுள்ளும் என்ன நடந்தது என்று தெளிவும் பொது மக்களுக்கு கிடைத்திருக்கிறது.

கமல் ஸ்ரீவித்யாவை காதலித்து ஏமாற்றி விட்டார், ஸ்ரீவித்யாவை காதலித்துக் கொண்டிருக்கும் போது வாணி கணபதியை திருமணம் செய்தார் என நிறைய தவறான விஷயங்கள் உலா வந்து கொண்டிருந்தன. உண்மையில் கமல் ஸ்ரீவித்யாவை திருமணம் செய்ய நினைத்ததும், அதற்கு ஸ்ரீவித்யாவின் அம்மா தான் முட்டுக்கட்டை போட்டு அவர்களுடைய காதல் தோல்விக்கு காரணமாக இருந்ததும் போதும் தெரிந்திருக்கிறது.

ஸ்ரீ வித்யா உடனான காதல் பிரிவிற்கு பிறகு கமல் வாணி கணபதியை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் சரிகாவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு விவாகரத்து செய்தார், கௌதமியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார் என எல்லாமே மீடியாவுக்கு வெளிப்படையாக சொல்லப்பட்டது. ஆனால் காதல் பிரிவிற்கு பிறகு ஸ்ரீவித்யா தன்னுடைய சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தார் என வெளியில் பேசப்படவே இல்லை.

Also Read:50 வருடமா சினிமாவிற்காக ஓடிக்கொண்டிருக்கும் 5 நடிகர்கள்.. கொல செய்ய நினைத்தவரையே கொண்டாடிய கமல்

ஸ்ரீவித்யா கமலுடன் பிரேக் அப் செய்த பிறகு பிரபல இயக்குனர் பரதனை காதலித்தார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட விரிசலுக்கு பிறகு பரதன் ஸ்ரீவித்யாவை பிரிந்து விட்டு நடிகை லலிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். லலிதா சமீபத்தில் ரிலீஸ் ஆன வீட்டில் விசேஷங்க படத்தில் சத்யராஜுக்கு அம்மாவாக நடித்தவர். லலிதா மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் நெருக்கமான தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரதனை பிரிந்த பிறகு ஸ்ரீவித்யா ஜார்ஜ் என்பவரை காதலித்தார். இவர்களுடைய காதலுக்கு ஸ்ரீவித்யா வீட்டில் பயங்கர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வீட்டை எதிர்த்துக்கொண்டு திருமணம் செய்ய மாட்டேன் என கமலை பிரேக்கப் செய்த ஸ்ரீவித்யா, அதே வீட்டை எதிர்த்துக்கொண்டு இயக்குனர் ஜார்ஜை திருமணம் செய்தார். ஜார்ஜ் மற்றும் ஸ்ரீவித்யாவுக்கு ஒத்துப் போகாத காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

திருமணத்தை மீறிய உறவு

விவாகரத்துக்கு பிறகு ஸ்ரீவித்யா மீண்டும் பரதனுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டார். தன்னுடைய நெருங்கிய தோழியின் கணவராக இருந்தாலும் பரவாயில்லை என பழைய காதலை புதுப்பித்தது ஸ்ரீவித்யா செய்த மிகப்பெரிய தவறு. பரதன் இறக்கும் வரையில் ஸ்ரீ வித்யா மற்றும் லலிதா இருவருடனுமே வாழ்ந்திருக்கிறார். பல தரப்பட்ட உறவு முடிவுக்கு பிறகு சினிமாவை மட்டுமே நம்பி வாழ்ந்த ஸ்ரீவித்யா 2006 ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தார்.

Also Read:முதலாளியாக வேண்டும் என்ற பேராசையில் மொத்த சொத்தையும் இழந்த 5 நடிகைகள்.. வளர்ப்பு பையனால் நஷ்டமடைந்த ஆச்சி