ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

உதயநிதிக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் அண்ணாச்சி.. புது குண்டை போட்ட உலக அழகி

ஜே டி ஜெர்ரி இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சொந்தமாக தயாரித்து, ஹீரோவாக நடித்திருக்கும் தி லெஜண்ட் திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

தற்போது அண்ணாச்சி இந்த படத்தை பிரமோஷன் செய்யும் வேலைகளில் பயங்கர பிசியாக இருக்கிறார். அந்த வகையில் இப்படம் ஹிந்தியில் வெளியாவதை ஒட்டி அண்ணாச்சி மும்பையில் ஒரு பிரஸ்மீட் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த நிகழ்வில் அண்ணாச்சியுடன் ராய் லட்சுமி, படத்தின் ஹீரோயின் ஊர்வசி ரௌடெலா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அண்ணாச்சி பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் மிகவும் சுவாரசியமாக பதில் அளித்தார்.

அதிலும் அவர் ஹிந்தியில் மிகவும் சரளமாக பேசியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பேசிய அண்ணாச்சி படம் குறித்த சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். மேலும் கதாநாயகி ஊர்வசியின் நடிப்பையும் அவர் புகழ்ந்து பாராட்டினார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக ஊர்வசி திடீரென அவரைப் பார்த்து தமிழ்நாட்டின் அடுத்த சிஎம் இவர்தான் என்று கிண்டல் அடித்தபடி கூறினார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அண்ணாச்சி திகைத்துப் போய் அவரிடம் இல்லை என்று தலையாட்டினார். இதனால் சற்று நேரம் அந்த இடமே கலகலப்பாக மாறியது.

தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பிசினஸ், நடிப்பு வரிசையில் அண்ணாச்சி அடுத்ததாக அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறி வருகின்றனர். மேலும் ஒரு சில குறும்பான ரசிகர்கள் அண்ணாச்சி உதயநிதிக்கு போட்டியாக களம் இறங்கப் போகிறார் என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News