வேட்டி சட்டையுடன் குட்டி சிவகார்த்திகேயனின் வைரல் புகைப்படம்.. அச்சு அசல் அப்பா போலவே இருக்காரே

சாதாரண டிவி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் படிப்படியாக தனது திறமையினால் முன்னேறி தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக மாறி இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடி வசூலை வாரி குவித்த நிலையில், அதன் பின் வெளியான பிரின்ஸ் படம் ரசிகர்களின் மத்தியில் ஓரளவு வரவேற்பு மட்டுமே பெற்றது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் மகன் வேட்டி சட்டையுடன் செம க்யூட்டாக இருப்பதால் அவரைக் குறித்து ரசிகர்கள் எக்கச்சக்கமான கமெண்ட்களை பதிவிடுகின்றனர்.

Also Read: அவதார் டீமுடன் கூட்டணி போடும் சிவகார்த்திகேயன்.. இது என்னடா புது ஊருட்டா இருக்கு!

அத்துடன் இவருடைய மகள் ஆராதனாவை குழந்தையாக பார்த்த ரசிகர்களுக்கு, அவர் நெடு நெடுன்னு வளர்ந்து இருப்பது போல் தெரிகிறது. அதேபோல் சிவகார்த்திகேயனின் மகன் குகன் தாஸ் கைக்குழந்தையாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அவர் பேட்டி சட்டையுடன் புன் சிரிப்புடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்துடன் பார்க்க வைக்கிறது.

மொத்தத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் குடும்பமாக வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படம் பார்ப்போரை பொறாமைப்படுத்தும் வகையில் இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்த வருகிறார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. அதேபோல் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படமும் இந்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் மனைவி மற்றும் மகன், மகளுடன் வெளியிட்டிருக்கும் சமீபத்திய குடும்ப புகைப்படம்

siva-family-cinemapettai
siva-family-cinemapettai

Also Read: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியால் மோசம் போன இயக்குனர்.. மொத்த தப்பையும் இப்படி என் தலையில இறக்கிட்டீங்களே!

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -