அவங்க என் கைல மாட்டுனா அவ்ளோதான்.. பகிரங்கமாக உண்மையை போட்டுடைத்த ஷகிலா!

நடிகை ஷகிலா 80 களின் காலகட்டத்தில் இருந்தே சினிமாவில் இருந்து வருகிறார். தமிழில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் இவர் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களாக சினிமாவில் ஆக்டிவாக இல்லாத இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மீடியாவுக்குள் வந்தார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஷகிலா யூடியூபில் தற்பொழுது பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவருடைய காலகட்டத்தில் இருந்த நிறைய நடிகைகளிடமும், மேலும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் பெண்களிடமும் பேட்டி எடுத்து வருகிறார். தற்போது ஷகிலா அவருடைய சொந்த வாழ்க்கை பற்றியும் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

Also Read:இளம் வயதில் தமிழில் ஷகிலா கலக்கிய 4 படங்கள்.. வயதுக்கு வராமல் கவுண்டமணியை பரிதவிக்க விட்ட கவர்ச்சி புயல்

இவர் எப்பொழுதும் மனதில் பட்டதை ரொம்பவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. தன்னுடைய கடந்த கால சினிமாவை பற்றி பேசிய போது ஒரு படத்தைப் பற்றியும், அந்த பட குழு செய்த தவறை பற்றியும் ரொம்பவே கோபமாகவும், ஆதங்கமாகவும் பேசி இருக்கிறார் . அந்த படத்தில் தன்னை தவறாக காட்டியதாகவும் சொல்லி இருக்கிறார்.

70களில் ஆரம்பித்து கிட்டத்தட்ட பல வருடங்களாக சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவருடைய பயோ பிக் ஹிந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் என்னும் பெயரில் வெளியாகி இருந்தது சில்க்கின் வாழ்க்கை கதையை பொறுத்த வரைக்கும் அவருடைய மரணம் என்பது எப்போதுமே சர்ச்சைக்குள் ஆனது தான் அதனால் அதைப் பற்றி பெரும்பாலும் திரைக்கதையாக சொல்ல மாட்டார்கள். ஆனால் தற்போது நடிகை ஷகிலா அந்த படத்தில் தன்னை பற்றி கூறி இருப்பதே பொய் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:சரமாரியாக விட்டு விளாசிய ஷகிலா.. விஷத்தை கக்க முடியாமல் பல்லு புடுங்கிய பாம்பான பயில்வான்

அந்த திரைப்படத்தில் சில்க் மார்க்கெட் கொஞ்சம் சரியும் நேரத்தில் நடிகை ஷகிலா அவருக்கு போட்டியாக வந்திருப்பதாக வசனமும், அது சம்மந்தப்பட்ட காட்சிகளும் வரும். ஷகிலா அதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அவர் மலையாளத்தில் முதன் முதலில் சில்க் ஸ்மிதாவிற்கு தங்கையாகவே நடித்ததாகவும், அவர்கள் இருவருக்குள் எந்த போட்டியும்இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

உண்மையை சொல்ல போனால் சில்க்கின் மார்க்கெட் குறைந்த ஒரு சில வருடஙக்ளுக்கு பின்பு தான் ஷகிலாவுக்கு மலையாள திரைப்பட உலகில் வாய்ப்பு கிடைத்ததாகவும் சொல்லியிருக்கிறார். தன்னை தவறாக காட்டிய அந்த படக்குழு மீது செம கோவத்தில் இருப்பதாகவும், நேரில் பார்த்தால் கண்டிப்பாக ஏதாவது கேட்டு விடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

Also Read:ஷகிலா கேட்ட கேள்வியில் கதறிய கவர்ச்சி புயல்.. தெரிஞ்சுதான் காட்டுறேன்னு இதுல பெருமை வேற

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்