திருமணம் ஆகாமலே உறவில் இருந்த 8 ஜோடிகள்.. சிம்புவை ஓவர்டேக் செய்த நயன்தாரா

சினிமாவில் நடிகர்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டார்கள். சினிமாவின் அன்றாட செய்திகளில் கிசுகிசு வருவது வழக்கம்தான். இதில் சில கிசுகிசுக்கள் பொய்யாகவும் இருக்கக்கூடும். பொய்யாக உள்ள செய்தியால் உண்மையால் சேர்ந்தவர்களும் உண்டு. அதேபோல் தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசு பேசப்பட்ட 8 நடிகர், நடிகைகளை பார்க்கலாம். இதில் எண்ணிக்கையில் சிம்புவை தாண்டிவிட்டார் நயன்தாரா அதாவது சில வருடம் சிம்பு, சில வருடம் பிரபுதேவா தற்போது விக்னேஷ் சிவன் என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

கமலஹாசன் – சரிகா: கமலஹாசன் முதல் மனைவி வாணி கணபதி உடன் சிலகாலம் குடும்பம் நடத்தி வந்தார். பின்பு, கமல் பாலிவுட்டுக்கு சென்றபோது நடிகை சரிகா மீது காதல் வயப்பட்டு உள்ளார். இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு சரிகா கருவுற்றதால் கமல் சரிகா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு சுருதி ஹாசன், அக்ஷர ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளார்கள். அதன் பிறகு கமலும் சரிகாவும் விவாகரத்து பெற்றார்கள் பெற்றார்கள். கமல் நடிகை கௌதமி உடன் சில காலம் வாழ்ந்து வந்தார்.பின் திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் பிரிந்து விட்டார்கள்.

திரிஷா – வருண்: நம்பர்-1 நடிகையாக இருந்த திரிஷா தொழிலதிபர் வருண் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது. சில கருத்து வேறுபாட்டினால் திருமணம் வரை செல்லாமல் நின்றுவிட்டது. பிறகு தெலுங்கு நடிகர் ராணாவை திரிஷா காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திரைப்பட விழாக்களில் ஒன்றாக ஜோடியாக செல்வார்கள். கடைசியில் ராணாவும் நண்பர் என்று சொல்லி இருவரும் பிரிந்து விட்டார்கள்.

சிம்பு – நயன்தாரா: வல்லவன் படத்தில் நயன்தாரா, சிம்பு இருவரும் ஜோடியாக நடித்தார்கள். அந்தப் படத்திலேயே மிக நெருக்கமான காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது. திரை உலகமே பேசும்படி நெருக்கமாக வளர்ந்த இவர்களது காதல் ஒரு கட்டத்தில் முறிந்தது. பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். ஆனாலும் இவர்கள் மீண்டும் ஒன்று சேரவில்லை.

பிரபுதேவா – நயன்தாரா: நடிகர் பிரபுதேவா, ரமலதா என்பவரை 1995 இல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தை உள்ளது. பிரபுதேவாவின் மூத்த மகன் மூளையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் சிம்புவுடன் காதல் முறிந்த நயன்தாரா பிரபுதேவாவை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் பல இடங்களில் சுற்றித் திரிந்து விரைவில் திருமணம் என்ற செய்தி ஊடகங்களில் கசிந்தது. நயன்தாராவிடம் ஏற்பட்ட பிரச்சனையால் தன் காதலை முறித்துக் கொண்டார் பிரபுதேவா. நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

விஷால் – வரலட்சுமி: விஷால் மற்றும் வரலட்சுமி இருவரும் 8 வயது முதல் நட்புடன் பழகி வந்தார்கள். பின்னடைவில் இது காதலாக மாறியது. நாடி, நரம்பு, உயிர், அவர் இல்லாமல் நான் இல்லை, மனதுக்கு நெருக்கமானவர், வரம், வாழ்வில் பொக்கிஷம் என்று வரலட்சுமியை விஷால் உருகி உருகி காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் டேட்டிங் என்று சுற்றி திரிந்தார்கள் பின்பு இருவருக்கும் திருமணம் என்று சொல்லப்பட்ட நிலையில் வரலட்சுமி விஷாலிடம் இருந்து விலகிவிட்டார்.

சித்தார்த் – ஸ்ருதிஹாசன்: கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், சித்தார்த் இருவரும் ஓ மை ஃபிரண்ட் படத்தில் இணைந்து நடித்தார்கள். முதலில் நட்பாக பழகி பின் காதலித்து விழுந்தார்கள். இருவரும் ஒன்றாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கை முறையில் அப்பார்ட்மென்டில் வசித்து வந்துள்ளார்கள். விரைவில் திருமணம் என்ற செய்தி தெலுங்கு சினிமாவை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டார்கள். நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணமானவர்.

சித்தார்த் – சமந்தா: நடிகர் சித்தார்த் ஸ்ருதிஹாசனுக்கு பிறகு சமந்தாவை உருகி உருகி காதலித்து வந்தார். சித்தார்த், சமந்தா இருவரும் சிறுவயது முதலே நட்பாக பழகி வந்தார்கள். பின் இருவரும் சினிமாவில் பிரபலமானவர்கள். பின் இருவரும் காதலித்து லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்தார்கள். சில காரணங்களால் ஒரு கட்டத்தில் இவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள். பின் சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

சிம்பு – ஹன்சிகா மோத்வானி: சிம்பு, ஹன்சிகா இருவரும் வாலு, வேட்டை மன்னன் ஆகிய படத்தில் இணைந்து நடித்தார்கள். படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. சினிமா வட்டாரங்களில் இவர்களது கிசுகிசு பெரிதும் பேசப்பட்டது. இவர்களது காதலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டுவிட்டரில் வெளியானது. ஆனால் அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள்.