செல்பி புள்ளைக்கு ஹாப்பி பர்த்டே.. கோடிகளின் அதிபதி சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு

Samantha Networth: உடல்நல பிரச்சனையால் கொஞ்சம் பிரேக் எடுத்திருந்த சமந்தா இப்போது மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டார். அதிலும் சோசியல் மீடியாவில் வளைத்து வளைத்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.

மேலும் பாலிவுட் வாய்ப்பைப் பிடிப்பதிலும் இவர் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் சமத்து பேபி இன்று தன்னுடைய 37வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு நிலவரம் பற்றிய தகவலும் கசிந்துள்ளது.

சமந்தாவின் சொத்து விவரம்

அதன்படி இவர் இதுவரை சம்பாதித்துள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 95 லிருந்து 100 கோடியாக இருக்கிறது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இவருக்கு சொந்தமாக சொகுசு வீடுகள் இருக்கின்றன.

அதில் தியேட்டர், ஜிம், நீச்சல் குளம் என சகல வசதிகளும் இருக்கின்றன. அதேபோல் ஆடி, ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ என வகை வகையான கார்களும் இவரிடம் உள்ளது.

இதன் மதிப்பு மட்டுமே பல கோடிகள் தாண்டும் என்கின்றனர். இது தவிர சில தொழில்களில் இவர் முதலீடும் செய்திருக்கிறார்.

அது மட்டுமின்றி விளம்பர படங்கள், சோசியல் மீடியா ஆகியவற்றின் மூலமும் இவருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இப்படி பல கோடிகளின் அதிபதியாக இருக்கும் இந்த செல்பி புள்ளைக்கு ஹாப்பி பர்த்டே.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்