அருவருப்பான டி-ஷர்ட் அணிந்த சமந்தாவின் புகைப்படம்.. என்னது அது தப்பில்லையா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. விவாகரத்துக்குப் பின்னர் அவர் தற்போது படங்களில் நடிப்பதில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தெலுங்கு மற்றும் தமிழில் சில திரைப்படங்களில் நடித்து வரும் அவர் தற்போது ஆங்கில திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதற்கு இடையில் அவர் வெளிநாடுகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று தனது நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் பொது வெளியில் ஷாப்பிங் செய்து விட்டு நடந்து வரும் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதில் அவர் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு போன் பேசியபடி வருகிறார். கேஷுவலான டீ சர்ட், பேண்ட் அணிந்திருக்கும் சமந்தாவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதற்கு காரணம் அந்த டி ஷர்ட்டில் இடம்பெற்றிருந்த வாசகம் தான். சர்ச்சையான வார்த்தைகள் இடம் பெற்றுள்ள அந்த டி ஷர்ட்டை சமந்தா அணிந்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி தான் அவர் இந்த மாதிரி உடை அணிந்து இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.

samantha
samantha
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்