சூப்பர் ஸ்டாரை சரமாரியாக விளாசிய ரோஜா.. விஷயம் தெரியாமல் பேசி சிக்கலில் மாட்டிக்கொண்ட ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் படப்பிடிப்புகளில் பிஸியாக வேலை செய்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரொம்பவும் வெளிப்படையாக பல விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது ரஜினி பேசியது கூட மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இப்போது சமீபத்தில் இரண்டு, மூன்று பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், தன்னுடைய உடல்நிலை பற்றியும் கூட வெளிப்படையாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அதேபோன்று நேற்று ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரஜினி. அதில் ஆந்திர மக்களிடம் ரொம்பவும் நட்புடன், சரளமாக தெலுங்கில் பேசியிருந்தார்.

Also Read:கமல் கொடுத்த தைரியத்தால் வந்த தலைக்கணம்.. சூப்பர் ஸ்டாரை இயக்க கண்டிஷன் போட்ட லோகேஷ்

மேடையில் இருந்த நடிகர் பாலையாவை பற்றி பேசிய ரஜினிகாந்த், அவருடைய நடிப்பை பற்றி புகழ்ந்தும் இருந்தார். படங்களில் மட்டுமே அவர் அடித்தாலே ஜீப் வண்டிகள் பறக்கும். இதேபோன்று நானோ அல்லது இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாபச்சனோ செய்தால் நன்றாக இருக்காது, ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது பாலையா என்பதால் மட்டுமே அவருடைய அதிரடி காட்சிகளை ரசிகர்களாகிய நீங்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கூறினார்.

மேலும் அதே மேடையில் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் அமர்ந்திருந்தார். அவரை பற்றி பேசிய ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவிடம் எதிர்காலத்தைப் பற்றிய பல திட்டங்கள் இருக்கிறது என்றும், அவர் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றும், அப்படி மீண்டும் முதலமைச்சர் ஆகும் பொழுது உண்மையாகவே என்டிஆர் ஆசிமலை பொழிவார் என்றும், சந்திரபாபு ஆட்சியில் ஆந்திர தேசம் மிகப்பெரிய அளவில் முன்னேறும் என்றும் சொல்லியிருந்தார்.

Also Read:இந்த வருடம் இந்திய சினிமாவை புரட்டிப் போட உள்ள 6 தமிழ் படங்கள்.. பாலிவுட்டுக்கு பயத்தை காட்டும் லியோ

ரஜினிகாந்தின் இந்த பேச்சு குறித்து நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா இன்று பதிலளித்திருக்கிறார். அதில் ரஜினி ஒரு ஹீரோ என்பதால் உண்மை எதுவும் தெரியாமல் பேசுகிறாரா, அல்லது சந்திரபாபு நாயுடு எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை பஜனைக் கூட்டத்தில் பேசுவது போல் பேசிவிட்டு சென்றிருக்கிறாரா, அவர் பேசுவதை கேட்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது என்று சொல்லி இருக்கிறார்.

உண்மையில் சந்திரபாபு நாயுடுவின் மாமனாரான என்டிஆர் ஆந்திர மாநிலத்தின் பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியும். அவர் இறப்பதற்கு முன்பு சந்திரபாபு ஒரு திருடன் என்றும், ஈர துணியை வைத்து கழுத்தை அறுப்பவன் என்றும் மீடியா முன்பு பேசி இருந்தார். அப்படி இருக்கும் பொழுது சந்திரபாபுவுக்கு என் டி ஆர் ஆசி வழங்குவார் என்று ரஜினி பேசிய பேச்சு தான் ரோஜா இப்படி பதிலடி கொடுத்ததற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

Also Read:உறுதி செய்யப்பட்ட தலைவர் 171.. சம்பளம் எல்லாம் முக்கியமில்ல, இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினி

- Advertisement -