எதே மாற்றம் வேண்டுமா.. ராதிகாவை கொக்கி போட்டு சிக்க வைத்த பத்திரிக்கையாளர்

Actress Radhika: சரத்குமார் தன்னுடைய கட்சியை திடீரென பாஜகவுடன் இணைத்து பேரதிர்ச்சியை கொடுத்தார். அதைவிட அதிர்ச்சி ராதிகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தான்.

அதன்படி விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் இவர் மிகத் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அதே தொகுதியில் இவருக்கு எதிராக கேப்டன் மகன் விஜய பிரபாகரனும் போட்டியிடுகிறார்.

அதனாலேயே இந்த தொகுதி மீடியாக்களிடம் அதிக கவனம் பெற்றது. இதில் யார் ஜெயிப்பார்கள் என்ற ஆர்வமும் கேள்வியும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகம் உள்ளிட்ட இடங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதில் பிரபலங்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

வாயை விட்டு மாட்டிய ராதிகா

அந்த வகையில் ராதிகா சரத்குமார் ஓட்டு போட்டு வெளியில் வந்தவுடன் பத்திரிகையாளரிடம் பேசினார். அப்போது நீங்கள் பிரச்சாரம் செய்த போது மக்கள் என்ன சொன்னார்கள் என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராதிகா மாற்றம் வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என சொன்னார். உடனே அந்த பத்திரிக்கையாளர் அப்படி என்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்களா என நங்கூரம் போல் ஒரு கேள்வியை கேட்டார்.

இதனால் அதிர்ந்து போன ராதிகா வாயை விட்டு மாட்டிக்கொண்டோமே என சங்கடத்துடன் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.எந்த கட்சியில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு அவர் பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் மேடம் ஓட்டாவது கரெக்டா போட்டிங்களா என கலாய்த்து வருகின்றனர். ஆக மொத்தம் நடந்து முடிந்துள்ள இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்