நயன்தாராவை பற்றி புட்டு புட்டு வைத்த சரண்யா பொன்வண்ணன்.. இப்படி பட்டவரா லேடி சூப்பர் ஸ்டார்

நடிகை சரண்யா பொன்வண்ணன் 80 மற்றும் 90களில் கமலஹாசன், பிரபு, சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். அதன்பின்னர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்த இவர் பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.அதன் பின்னர் இயக்குனர் அமீர் மூலம் ராம் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு அம்மாவாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கினார்.

இளம் ஹீரோக்கள் மற்றும் முன்னணி ஹீரோக்கள் படங்கள் என பல படங்களில் கலக்கி வருகிறார் சரண்யா. நிறைய நடிகர் மற்றும் நடிகைகளுடன் நடிப்பதால் அவ்வப்போது அவருடைய பேட்டிகளில் தன்னுடைய சக கலைஞர்களை பற்றி பகிர்ந்து கொள்வார். எந்த ஒளிவு மறைவுமின்றி பேசக்கூடியவர் இவர். அப்படி ஒரு பேட்டியில் நடிகை நயன்தாராவை பற்றி பேசியிருக்கிறார்.

Also Read:10 வயது வித்தியாசமுள்ள நடிகருடன் கூட்டணி போடும் நயன்தாரா.. விக்கியை தூக்கிவிட வேற வழியே இல்ல!

நடிகை நயன்தாரா ரொம்பவும் நேர்மையான குணம் உடையவர் என்றும், அவர் யாருடனாவது பேசவில்லை என்றால் சந்தேகமே இல்லாமல் அந்த நபர் தான் கெட்டவராக இருப்பார் என்று சொல்லியிருக்கிறார். யாராவது தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் இருந்து விலகிவிடுவாராம். அதற்கு காரணம் அது போன்ற ஆட்களை சமாளிக்க முடியாது என்பதால் தானாம்.

எப்போதுமே பாசிட்டிவாக மட்டுமே பேசும் குணமுடையவர் நயன்தாரா என்றும், ஏற்கனவே தான் காதலித்த சிம்பு மற்றும் பிரபுதேவாவிடம் இருந்து கசப்பான அனுபவங்கள் மட்டுமே கிடைத்திருந்தாலும், தான் மீண்டும் காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏமாற்றாமல் திருமணம் செய்திருக்கிறார் என்றும் சொல்லியிருக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

Also Read:நயன்தாரா புருஷனுக்கு இப்படி ஒரு நிலைமையா?. அனுதாபம் தேடும் விக்னேஷ் சிவன்

தொழில் மற்றும் உறவுகளில் ரொம்ப நேர்மையாக நயன்தாரா நடந்து கொள்வதாக சரண்யா தெரிவித்திருக்கிறார். சினிமா மற்றும் தொழில் இரண்டிலுமே பிசியாக இருக்கும் நயன்தாரா, தற்போது பிறந்திருக்கும் அவருடைய இரண்டு ஆண் குழந்தைகளிடமும் அதிக நேரம் செலவிட்டு நல்லபடியாக பார்த்து கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார்.

நயன்தாரா நேர்மையானவர் என்பதை சரண்யா பொன்வண்ணன் மட்டுமில்லை, சினிமாவை சேர்ந்த எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள்.அவருடைய முன்னாள் காதலர்களான சிம்பு மற்றும் பிரபுதேவா கூட இதை சொல்லியிருக்கிறார்கள். மேலும் சரண்யா நயன்தாராவை பற்றி நிறைய நல்ல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Also Read:நயன் 75-வது படத்தின் ஹீரோ யார் தெரியுமா.? 10 வருடங்களுக்குப் பின் இணையும் எவர்கிரீன் ஜோடி

- Advertisement -spot_img

Trending News