ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ரெண்டே ஹீரோக்களால் கேரியரை தொலைத்த நமீதா.. நம்பி பறிபோன சினிமா வாழ்க்கை

90ஸ் கிட்ஸ் களின் கனவு கன்னியாக இருந்த நடிகை நமீதா, 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த போது, டாப் நடிகைகளுக்கு கடும் போட்டியாக தெரிந்தார்.

ஆனால் நமீதா இருக்கும் உயரத்திற்கு அவருக்கு ஹீரோ கிடைக்காமல் பல படங்கள் நின்றுபோனதாம். குறிப்பாக 2004 இல் வெளியான ‘ஏய்’ படத்தில் சரத்குமார் ஜோடியாகவும், 2005 ஆம் ஆண்டு ‘இங்கிலீஷ்காரன்’ படத்தில் சத்யராஜுக்கு கதாநாயகியாகவும், அதன்பின் 2007 இல் நடிகர் ஜீவன் உடன் ‘நான் அவன் இல்லை’ போன்ற படங்களில் தனக்கு ஏற்ற ஹீரோக்கள் என்று பூரிப்புடன் இணைந்து நடித்தார்.

Also Read: அரபிய குதிரை போல் தமிழ் சினிமாவை ஆட்டி படைத்த 5 நடிகைகள்.. நமீதாவை உருட்டிய சத்யராஜ்

ஏனென்றால் தன்னுடைய உயரத்திற்கு சரத்குமார், சத்யராஜ், ஜீவன் போன்றவர்கள் தான் கரெக்டாக இருப்பார்கள் என்று அவர்களை நம்பி சரியான கதையை தேர்வு செய்ய தவறிவிட்டார். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவர் வெயிட் அதிகமாக போட்டுவிட்டார்.

இதனால் அஜித் உடன் பில்லா மற்றும் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் கதாநாயகியாக ஐட்டம் நடிகை போலவே கவர்ச்சி தூக்கலாக நடித்து தன்னை ஒரு கவர்ச்சி புயலாகவே காட்சிப்படுத்தினார். அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான பட வாய்ப்புகள் சுத்தமாகவே இல்லாமல் போனது.

Also Read: 80’s முதல் இப்ப வரை கவர்ச்சிக்கு பேர் போன 6 ஹீரோயின்கள்.. எக்கு தப்பாய் விஜய்யுடன் கவர்ச்சி காட்டிய சங்கவி

மேலும் ஏய் படத்தில் சிக்குனு சிறுத்தை குட்டியாக இருந்த நமீதா, அதன்பின் பெருத்துபெரிய குட்டியாக மாறிவிட்டார். பிறகு நமீதா உடன் ஜோடி போட்ட சத்யராஜ் மற்றும் சரத்குமார் இரண்டு ஹீரோக்களும் குணச்சித்திர நடிகர்களாகவும் மாறிவிட்டனர். அதன்பின் நமீதாவிற்கு சினிமா வாய்ப்புகள் அமையவே இல்லை.

ஒருவேளை நமீதா உயரத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் கைக்கு வந்த நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் உயரமான நடிகர்களான சரத்குமார், சத்யராஜ் இருவரால் அவருடைய சினிமா வாழ்க்கையே பறிபோனது. இப்போது நமீதா நடிகர் வீரேந்தரா சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டு இரட்டைக் குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிட்டார்.

Also Read: 2022ஆம் ஆண்டில் குழந்தை குட்டியுமாக மாறிய 5 நடிகைகள்.. சர்ச்சைக்குள்ளான நயன்தாராவின் வாடகைத்தாய் ட்வின்ஸ் பேபி

- Advertisement -

Trending News