அம்மா போட்ட தப்பு கணக்கால் தான் இப்படி நடந்தது.. மனம் நொந்து மீனா சொன்ன உண்மை

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி ஹீரோயினாக இவர் வலம் வந்தார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன், நடிகர் அஜித்குமார் உட்பட அத்தனை முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து விட்டார்.

நடிகைகளில் ரொம்பவும் அழகானவர் மீனா. இவரை சினிமாவில் நிறைய ஹீரோக்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இருக்கின்றனர். ஆனால் மீனா தன்னுடைய அம்மா என்ன சொல்கிறாரோ அதுதான் என்று ரொம்பவும் கட்டுக்கோப்பாக, எந்த கிசுகிசுக் களிலும் சிக்காத நாயகியாக தமிழ் சினிமாவில் இருந்தார்.

Also Read:குஷ்பூவுக்காக மாற்றப்பட்ட கதை, வம்படியாக உள்ளே வந்த மீனா.. நாட்டாமை படத்தின் சுவாரஸ்யத்தை பகிர்ந்த இயக்குனர்

அவருடைய அம்மா விருப்பத்தின் பேரிலேயே பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. அதன் பின்னர் சினிமாவில் தலை காட்டாத மீனாவுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. மீண்டும் மீனா சினிமாவில் கொஞ்சம் ஆக்டிவாக ஆரம்பித்த போது அவருடைய கணவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி பேசி இருந்தார் நடிகை மீனா. அப்போது தான் தவறவிட்ட நிறைய ஹிட் படங்களை பற்றி பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்று இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம். இந்தப் படத்தில் நீலாம்பரி கேரக்டரில் மீனாவை நடிக்க வைக்க இயக்குனரும், ரஜினியும் ரொம்பவே ஆசைப்பட்டு இருக்கின்றனர்.

Also Read:2வது திருமணத்தை குறித்து முதல் முதலாக வாய் திறந்த மீனா.. மகளுக்காக எடுத்த அதிரடி முடிவு

ஆனால் மீனாவின் அம்மா இதுவரை அவர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து நிறைய படங்கள் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களை பெற்றிருப்பதால் இது போன்ற ஒரு நெகடிவ் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பயந்து மறுத்துவிட்டாராம். மீனாவுக்கு அந்த கேரக்டரில் நடிக்க ஆசை இருந்தும் அம்மாவுக்காக வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

அந்த கேரக்டரை எடுத்து பண்ணிய ரம்யா கிருஷ்ணனுக்கு இன்று வரை பேரும் புகழும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட கேரக்டரை மிஸ் பண்ணிய மீனாவுக்கு அந்த வருத்தம் இன்னும் இருப்பதாகவும், நான் அந்த கேரக்டரில் நடித்திருக்கலாம் எனவும், அதற்காக அம்மா மீது இன்னும் கோபம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

Also Read:மீனாவின் அம்மாவால் அவமானப்படுத்தப்பட்ட அஜித்.. பெரிய மனுஷன் என நிரூபித்த AK

- Advertisement -