வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்களா? கடுப்பில் கன்னா பின்ன என திட்டிய குஷ்பூ

90களில் தமிழ் சினிமாவில்  இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகைதான் நடிகை குஷ்பூ. இவருடைய அழகாலும் வசீகரா நடிப்பாலும் மயங்கிய, முதன்முதலில் ரசிகர்களால் நடிகை ஒருவருக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புக்கு தான். மேலும் இட்லிக்கு குஷ்பூ இட்லி என்று ரசிகர்கள் பெயர் வைத்தனர்.

அதன் பிறகு நீண்ட நாட்களாக சின்னத்திரையில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய குஷ்பூ, சீரியல்களையும் தயாரித்து நடித்துக்கொண்டிருந்தார். ஒருபுறம் நடிப்பு மற்றொருபுறம் அரசியல் என பிஸியாக வலம் வந்துகொண்டிருந்த குஷ்பூ, நீண்ட நாட்களாக உடல் பருமனால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

இந்த  நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் எடையை குறைப்பதற்காகவே தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு சுமார் 18 கிலோ வரை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இவருடைய தற்போதைய தோற்றம் இளம் நடிகைகளை வியப்பில் ஆழ்த்துகிறது.

அத்துடன் இவர் வித விதமாக மாடர்ன் உடை அணிந்து அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் வயது அதிகமாகும்போது அழகு குறையும் என்பார்கள். ஆனால் குஷ்புக்கு வருடங்கள் போகப்போக அழகு மேலும் கூடிக்கொண்டே போகிறது. இப்போதும் குஷ்பு கதாநாயகியாக கூட நடிக்கலாம் என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் குஷ்பு கோல்டன் மாடர்ன் உடையில் புகைப்படம் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் குஷ்பு மெழுகு பொம்மை போல் தெரிகிறார். இதைப்பார்த்த ரசிகை ஒருவர், ‘ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்கள்? உங்களுடைய நல்ல தோற்றத்துடன் நீங்கள் வயதாகலாம்’ என கிண்டலடித்துள்ளார்.

இதைப்பார்த்த குஷ்பூ கோபமடைந்து, ‘நீங்கள்தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு காசு கொடுத்தீர்களா மை டியர்? மற்றவர்களது கஷ்டப்படுத்துவதில் உங்களுக்கு, அப்படி என்னதான் கிடைக்கப்போகிறது. உன்னை நினைத்தால் அவமானமாக இருக்கிறது’ என கன்னா பின்ன என திட்டினார். குஷ்புவின் இந்த பதில் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News