அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு.. தன்னம்பிக்கையால் சாதித்த நடிகை

keerthi Pandian Net Worth: சமீபத்தில் நடிகர் அசோக் செல்வன் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தால் இணையத்தில் மிகப்பெரிய வாதமே சென்றது. அதாவது கருப்பான மெலிந்த தோற்றம் உடையவராக இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தது.

இதை அடுத்து உலகிலேயே அழகான பெண் கீர்த்தி பாண்டியன் என அசோக் செல்வன் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இந்த சூழலில் இப்போது கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது பிரபல நடிகர் அருண் பாண்டியனின் இளைய மகள் தான் கீர்த்தி பாண்டியன்.

Also Read : அருண் பாண்டியன் நடித்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. பல ஹீரோக்களுக்கே டப் கொடுத்துருக்காரு மனுஷன்

அப்பா தொழிலில் சிறிது காலம் உதவியாக இருந்த கீர்த்தி பாண்டியன் அதன் பிறகு சினிமாவில் கதாநாயகியாக வர ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் தனது தந்தையின் அடையாளத்தை வைத்து வாய்ப்பு தேடக்கூடாது என்பதில் கீர்த்தி பாண்டியன் உறுதியாக இருந்திருக்கிறார். மேலும் அவர் கருப்பாக இருந்ததால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது.

அதன் பிறகு ஒரு வழியாக தும்பா படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தெலுங்கு ரீமேக்கில் உருவான அன்பிற்கினியாள் படத்தின் அவருடைய நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. இதனால் கீர்த்தி பாண்டியனுக்கு பாராட்டுகள் குவிந்து பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வரத் தொடங்கியது.

Also Read : அசோக் செல்வன், கீர்த்திக்கு காதல் உருவாக காரணமான ரொமான்டிக் படம்.. திருமணத்திற்காக வெளியிட்ட வீடியோ

அப்படி ப்ளூ ஸ்டார் படத்தில் தான் நடித்த போது கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் காதலித்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நடிகராக மட்டுமல்லாமல் தொழிலதிபராக இருக்கும் அருண்பாண்டியனுக்கு கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் இருக்கிறது.

ஆனால் கீர்த்தி பாண்டியன் தனது தன்னம்பிக்கையால் மட்டுமே சாதித்து தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதன்படி கிட்டத்தட்ட 10 கோடிக்கும் அதிகமாக கீர்த்தி பாண்டியனின் சொத்து உள்ளது. இது தவிர சொந்தமாக கார் வைத்திருக்கிறார். மேலும் அப்பாவின் பின்புலம் இல்லாமல் கீர்த்தி பாண்டியன் சொந்த காலில் நிற்பது பாராட்ட வேண்டிய விஷயம்.

Also Read : போர் தொழிலுக்குப் பிறகு கொட்டும் அதிர்ஷ்டம்.. வாரிசு நடிகையை கரம் பிடிக்கும் அசோக் செல்வன்