சிம்ரன் உடன் 22 வருடங்களுக்குப் பிறகு இணையும் நடிகை.. மல்டி ஸ்டார்களுக்கு போட்டியாக வரும் மல்டி ஆக்ட்ரஸ் மூவி

சமீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படங்கள் பான் இந்திய படமாக வெளியாகி வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் பிரபலமான நடிகர்களை பெரிய ஹீரோக்களின் படங்களில் போட்டு பான் இந்திய படமாக வெளியிடுகிறார்கள். இதனால் தமிழ் ஹீரோக்கள் அனைத்து மொழியிலும் ரசிகர்களை பெறுகிறார்கள்.

இவ்வாறு மல்டி ஸ்டார்ஸ்களுக்கு போட்டியாக இப்போது மல்டி ஆக்டர்ஸ் படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் சிம்ரன் உடன் 22 வருடங்களுக்குப் பிறகு ஒரு நடிகை இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி இது சிம்ரனின் 50ஆவது படமாகும்.

Also Read : முக்கி முக்கி 50வது படத்தில் நடிக்கும் இடுப்பழகி சிம்ரன்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்

அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் சப்தம் என்ற படம் உருவாகி வருகிறது. ஈரம் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் ஆதி தான் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிம்ரன், லட்சுமிமேனன் போன்ற பல மல்டி ஸ்டார் ஆக்ட்ர்ஸ் நடிக்கிறார்கள். மேலும் லைலாவும் இந்த படத்தில் முக்கிய தாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இவர் ஏற்கனவே சிம்ரன் உடன் இணைந்து பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Also Read : தாலி கட்டிய பின் சினிமாவிற்கு முழுக்கு போட்ட 5 நடிகைகள்.. கல்லா காலியானதால் மீண்டும் நடிக்க வந்த சிம்ரன்

இந்நிலையில் பிதாமகன் படம் வெளியாகி கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சப்தம் படத்தில் சிம்ரன் மற்றும் லைலா சேர்ந்து நடிக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் சிம்ரன், லைலா இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இப்போது மீண்டும் இவர்கள் ஒரே படத்தில் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இப்படம் ஹாரர் திரில்லர் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஈரம் படத்தை போல் சப்தம் படமும் ரசிகர்களை சீட்டின் நுனிக்க வரச் செய்யும் என்பது படத்தின் போஸ்டர் மூலம் தெரிய வந்துள்ளது. விரைவில் இப்படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாக உள்ளது.

Also Read : என்ன இது சிம்ரன்? வயசானாலும் உன்னோட அழகும் ஸ்டைலும் குறையவே இல்ல

Next Story

- Advertisement -