அந்த நடிகருக்காக அடம்பிடிக்கும் இளம் நடிகை.. எனக்கு எப்படியாவது ஒரு ஹீட் வேணும்

மலையாள சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் தான் அந்த நடிகை. அந்த படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகை மட்டுமல்லாமல் ரசிகர்களின் கவனத்தையும் நடிகை தன் பக்கம் ஈர்த்து விட்டார். தொடர் வெற்றி காரணமாக மலையாளம் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நடிகை தமிழிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவிலும் முதல் படமே நடிகைக்கு நல்ல படமாக அமைந்தது. இருப்பினும் தமிழில் பெரிய அளவில் நடிகைக்கு படங்கள் அமையவில்லை. அம்மணிக்கு தற்போது தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தான் மவுசு அதிகம். இருப்பினும் தமிழிலும் நடிகைக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழில் நடிகை ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், ஒல்லி நடிகருடன் நடித்த படத்திற்கு பின்னர் தான் நடிகைக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்ததாம். அதனால் மீண்டும் ஒல்லி நடிகருடன் இணைந்து எப்படியாவது நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வருகிறாராம்.

தற்போது வரை நடிகை தமிழ் சினிமாவில் எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் நடிகையிடம் கதை சொல்ல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அந்த நடிகரை வைத்து படம் எடுத்து மீண்டும் அவருடன் என்னை நடிக்க வையுங்கள் என கண்டிசன் போட்டு வருகிறாராம்.

நடிகைக்கு தற்போது டிமாண்ட் அதிகமாக உள்ளதால் இயக்குனர்களும் நடிகையின் கண்டிசனை ஏற்று கொள்ளலாமா வேண்டாமா என யோசித்து வருகிறார்களாம். நடிகைக்கு தற்போது மார்க்கெட் இருப்பது என்னமோ உண்மை தான். ஆனால் அதற்காக அந்த நடிகருடன் தான் நடிப்பேன் என கண்டிஷன் போடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்