சிலரின் பேச்சை நம்பி மோசம் போன பப்ளிமாஸ் நடிகை.. வாய்ப்புக்காக கெஞ்சும் பரிதாபம்

தென்னிந்திய சினிமாவில் கொழுக் மொழுக் என வைரலாகி கொண்டிருந்த நடிகை சிலரின் பேச்சால் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் ஒவ்வொருவரிடமும் கெஞ்சி கெஞ்சி படவாய்ப்பு வாங்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது சோகத்தை கொடுத்துள்ளது.

வடக்கிலிருந்து வந்திருந்தாலும் தன்னுடைய கொழுக் மொழுக் தேகத்தால் ரசிகர்களை வசியம் செய்து வெகுவிரைவிலேயே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தார் அந்த பப்ளிமாஸ் நாயகி. பெரும்பாலும் கமர்சியல் படங்களில் இந்த நடிகைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இந்த நடிகைக்கு தான் செம மவுசு இருந்தது.

இந்நிலையில் அந்த நடிகை தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த நடிகையின் அம்மா அந்த காதலுக்கு முட்டுக்கட்டை போட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு அந்த நடிகை தன்னுடைய சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். முதலில் கொழுக் மொழுக் தேகத்தை வைத்துக்கொண்டுதான் பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருந்தார்.

ஆனால் ஒரு சில படங்கள் அவரது நடிப்பில் தோல்வியை சந்தித்த நிலையில் யாரோ சிலர் கூறிய அறிவுரையை கேட்டு தன்னுடைய உடல் எடையை குறைத்து விட்டார். இதனால் தற்போது பார்ப்பதற்கு ஏதோ நோய் வந்து உடல் எடை குறைந்தது போல் இருக்கிறார் அந்த நடிகை. உடலை குறைத்தால் பட வாய்ப்பு கிடைக்கும் என சிலரின் பேச்சை நம்பி உடல் எடையை குறைத்ததால் தற்போது ஒரு படம் கூட கைவசம் இல்லாமல் திண்டாடி கொண்டிருக்கிறாராம்.

அந்த நடிகையின் 50வது படம் விரைவில் வெளியான பிறகு வாய்ப்பு கொடுக்கலாமா வேண்டாமா என யோசிக்கிறோம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதற்கிடையில் அந்த நடிகை தன்னுடைய பழைய காதலருடன் மீண்டும் காதல் கலாட்டாவை தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

போனது போகட்டும், இனி மூன்று வேளைக்கு முப்பது வேலையாக சாப்பிட்டு மீண்டும் இழந்த தன் உடலுடன் சேர்த்து மார்க்கெட்டையும் பிடித்துவிட வேண்டும் என தற்போது சாப்பாட்டு வேலையில் இறங்கிவிட்டாராம் அந்த நடிகை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்