முன்னாள் காதலனுடன் நடிக்க மாட்டேன், சில்மிசம் பண்ணுவாரு.. அடம்பிடிக்கும் பிரபல நடிகை

நம்ம ஊரு நடிகர் நடிகைகள் ஒரு காலத்தில் காதலிப்பதும் பின்னர் காதல் பிரிந்த பிறகு படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறேன் என பேட்டி கொடுப்பதும் நடைமுறையில் உள்ள ஒன்று தான். அந்த வகையில் ஒரு காலத்தில் காதலில் விழுந்த இரண்டு பறவைகள் ஈகோ காரணமாக பிரிந்து கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

அதன் பிறகு நடிகை சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக அந்த நடிகை நடிக்கும் படங்கள் தொடர் வெற்றி பெற்று வருவதால் வயதாகியும் அந்த நடிகைக்கு மார்க்கெட் இன்னும் குறையவில்லை. இதுவே இளம் நடிகைகளுக்கு பொறாமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அடுத்ததாக ஒரு ரொமான்டிக் இயக்குனர் தன்னுடைய படமொன்றில் அந்த முன்னணி நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கதை கேட்டு ஓகே கூறிய நடிகை ஹீரோ யார் என்று கேட்டு விட்டு அந்த இயக்குனரை வீட்டை விட்டு துரத்தி விட்டாராம்.

அந்த நடிகையின் காதலரும் அந்த ரொமான்டிக் இயக்குனரும் ஏற்கனவே இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து விட்டால் அந்த படத்தை காதல் ரசம் சொட்ட சொட்ட எடுப்பார்கள். ஹீரோ ஹீரோயினின் காதை கடிப்பது, கையை பிடிப்பது, காலை சுரண்டுவது என சேட்டைகள் அதிகமாகவே இருக்கும்.

தற்போது அந்த முன்னணி நடிகை ஒரு இயக்குனரை காதலித்து வரும் நிலையில் மீண்டும் தன்னுடைய முன்னாள் காதலருடன் இந்த மாதிரி ரொமான்டிக்காக நடித்தால் நம்முடைய பழைய காதல் எட்டிப் பார்க்கும் என பயந்து தேவையில்லாத காரணங்களை சொல்லி அந்த படத்தை நிராகரித்து விட்டாராம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இருவருக்குள்ளும் உள்ள கெமிஸ்ட்ரி எட்டிப் பார்த்ததாக தகவல். கொஞ்சம் ஸ்லிப் ஆகி இருந்தாலும் முன்னாள் காதலர் அந்த நடிகையை மீண்டும் உஷார் செய்து கல்யாணம் வரை கொண்டு போயிருப்பாராம். அதனாலேயே இந்த நடிகை பயப்படுகிறாராம்.

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -