முன்னாள் நடிகைக்கு அடித்தளம் போட்ட சன் டிவி.. லட்சக்கணக்கில் அள்ளிக்கொடுத்து தூக்கிய ஜீ தமிழ்

சமீபகாலமாக முன்னணி டிவி சேனல்கள் புதிய புதிய சீரியல்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம் பழைய சீரியல்களையும் கிடைக்கும் கேப்பில் ஒளிபரப்பி வருகின்றனர். வரவர சன் டிவியின் சீரியல் தரம் குறைந்து கொண்டே செல்கிறது.

ஒரு காலத்தில் சீரியல்களின் தாய் இடமாக இருந்த சன் டிவி நிறுவனத்திடமிருந்து விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் அதை பறித்து விட்டனர். சமீபகாலமாக தாய்மார்கள் அனைவரும் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சன் டிவியில் என்னதான் புதிய புதிய சீரியல்களை ஒளிபரப்பினாலும் பார்க்க ஆளில்லை. இந்நிலையில் பழைய சூப்பர் ஹிட் சீரியலான சித்தி சீரியல் இரண்டாம் பாகத்தை தொடர்ந்தனர். ஆனால் அந்த சீரியலும் பெரிய அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

மேற்கொண்டு ராதிகாவும் அந்த சீரியலில் இருந்து விலகியது சன் டிவி நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் தான் சன் டிவி நிறுவனம் மாபெரும் வெற்றி பெற்ற கோலங்கள் சீரியலில் நடித்த தேவயானியிடம் கோலங்கள் 2 சீரியல் பற்றிய பேச்சு வார்த்தைகளை கடந்த சில மாதங்களாக நடத்தி வந்துள்ளது.

devayani-cinemapettai
devayani-cinemapettai

ஆனால் இடையில் புகுந்த ஜீ தமிழ் நிறுவனம் தேவயானிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் ஒப்பந்தம் செய்துவிட்டதாம். விரைவில் இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கணக்காக சினிமாவையும் சீரியலிலும் விட்டு ஒதுங்கியிருந்த தேவயானிக்கு மீண்டும் சீரியல் ஆசையைக் காட்டி சம்பளத்தில் கெடுபிடி செய்து இன்னொரு சேனலுக்கு தாரை வார்த்து விட்டார்களாம்.

- Advertisement -