சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வாரிசு நடிகை என்பதால் வாரி கொடுத்த சிவகார்த்திகேயன்.. அதிதி சங்கரை தாக்கிய நடிகை

இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே அதிதி தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் மீசைய முறுக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஆத்மிகா, அதிதியை மறைமுகமாக தாக்கி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதாவது சிலருக்கு சினிமாவில் எந்த கஷ்டமும் படாமல் ஈஸியாக வாய்ப்பு கிடைத்து விடுகிறது என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஆத்மிகா மறைமுகமாக அதிதி சங்கரை தான் தாக்கி இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்று கூறி வருகின்றனர். மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆத்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் போதே அதிதி சங்கரை உறுதி செய்து விட்டனர் இதனால் வந்த ஆதங்கம் தான் இந்த ட்விட்டர் பதிவு என்கிறது கோலிவுட் வட்டாராம்.

மேலும் பாலிவுட்டில் தான் இது போன்று வாரிசுகளின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. தற்போது தமிழ் சினிமாவுக்கும் அது கொஞ்சம் கொஞ்சமாக வந்து விட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சூர்யா, கார்த்தி, விஜய், துருவ் விக்ரம், ஜெயம் ரவி போன்ற பல நடிகர்களும் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான்.

ஆனாலும் அவர்களுடைய திறமையினால் தான் இன்று ஒரு முன்னணி நடிகர்களாக அவர்கள் இருக்கின்றார்கள். மற்றபடி சினிமாவில் திறமை இல்லை என்றால் அவர்கள் ஓரம் கட்டப்பட்டு விடுவார்கள். உதாரணமாக சாந்தனு பாக்யராஜ், கௌதம் கார்த்திக், அதர்வா முரளி ஆகியோர் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் சினிமாவில் ஒரு வெற்றியை கொடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர்.

மேலும் சினிமா பின்புலம் இல்லாமல் வந்த சாய்பல்லவி போன்ற நடிகைகள் இன்று நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றனர். அதனால் திறமைக்கு தான் இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே தவிர வாரிசு என்ற காரணத்திற்காக அல்ல என்று ஆத்மிகாவின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News