நா அப்படி என்ன குறைஞ்சு போய்டேன்னு அவள ஓகே செஞ்சீங்க.. டாப் நடிகரிடம் கோபப்பட்ட நடிகை

கோலிவுட் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் அந்த நடிகருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் ஃபோன் பண்ணி கோபித்துக்கொண்ட செய்திதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வயதானாலும் அந்த நடிகர் பார்ப்பதற்கு இளமையாகவே இருப்பதால் இன்னும் இளம் நடிகைகள் மத்தியில் அவருக்கு ஒரு கிரேஸ் இருந்துகொண்டே இருக்கிறது. அவருடன் நடிக்க சிறு வண்டு முதல் பெரிய நடிகைகள் வரை அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

அந்த வகையில் ராசியில்லாத நடிகை என ஒதுக்கப்பட்ட ஒரு நடிகை அந்த டாப் நடிகரின் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தை பெரிய நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் அந்த செய்தியை கேட்டு அப்செட்டான அந்த சமத்து நடிகை டாப் நடிகரிடம் போன் பண்ணி புலம்பினாராம். அவ்வப்போது அந்த டாப் நடிகரிடம் போன் பண்ணி நலம் விசாரிக்கும் அந்த நடிகை இந்த முறை போன் பண்ணி சண்டை போட்டு விட்டாராம்.

ஏற்கனவே 3 படத்தில் ஜோடி போட்டுள்ளோம், நம்ம ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதனாலேயே உங்களுடைய பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன், ஆனால் நீங்க அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுப்பீங்கனு என நினைச்சுக்கூட பார்க்கல என செல்லமாக கோபித்துக் கொண்டாராம்.

அந்த டாப் நடிகரோ வழக்கம்போல் எதுவும் சொல்லாமல் சின்ன புன்னகையுடன் பேச்சுவார்த்தை முடித்து கொண்டாராம். அந்த டாப் நடிகருக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. தன்னுடைய படங்களில் யார் யார் நடிக்க வேண்டும், நடிக்கக்கூடாது என எப்போதுமே இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கட்டளை போடுவது கிடையாது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்