கல்யாணத்துக்கு முன்னாடியே நடிகைக்கு குழந்தை கொடுத்த காதலர்.. இப்போ பிரேக்கப் பண்ணிட்டாங்களாமே!

இப்போதெல்லாம் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொள்வது பிரபலங்களுக்கு சாதாரண விஷயமாகி விட்டது. இவ்வளவு ஏன் கிரிக்கெட் வீரர்கள் முதல் நடிகர் நடிகைகள் வரை அனைவருமே இப்படித்தான்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் எமி ஜாக்சன். ஷங்கரின் பிரதான நாயகியாக வலம் வந்தார். ஷங்கர் இயக்கிய ஐ, 2.O போன்ற படங்கள் இவருடைய சினிமா கேரியரில் பெரிய அளவில் உதவின.

அதுமட்டுமில்லாமல் விஜய்யுடன் தெறி படத்திலும் நடித்திருந்தார். 2.O படத்திற்கு பிறகு பெரிய அளவில் இந்திய சினிமாவில் வரவேற்பு இல்லாததால் தன்னுடைய காதலருடன் இல்லற வாழ்க்கையை தொடங்கினார் எமி ஜாக்சன்.

மேலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்த எமி ஜாக்சன் திடீரென தன்னுடைய காதலரை பிரேக்கப் செய்து விட்டாராம்.

திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்வது போல், தற்போது காதலிக்கும் நபரை பிரேக்கப் செய்து விட்டார் எமி ஜாக்சன். ஆனால் இடையில் குழந்தை எங்கிருந்து வந்தது என்று கேட்டால், அது எங்களுடைய ஞாபகார்த்தம் எனவும் குட்டையை குழப்புகிறார்.

சினிமாவில் தான் இந்த மாதிரி புதிய புதிய விஷயங்கள் நடைபெறும். எமி ஜாக்சன் சில வருடங்களாக குழந்தையை பராமரிப்பதற்காக படங்களில் ஒப்புக்கொள்ளாமல் இருந்ததாகவும், தற்போது குழந்தை ஓரளவு வளர்ந்து விட்டதால் இனி இந்திய சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

amy-jackson-lover-cinemapettai
amy-jackson-lover-cinemapettai

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -