நைட்டியில் நச்சுனு புகைப்படம் வெளியிட்ட விருமாண்டி அபிராமி.. விருவிருவென வைரலாகும் புகைப்படம்

அபிராமி நடிப்பில் தமிழில் வெளியான வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடிக்க அன்றைய கால இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறினார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் அபிராமியை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தாலும் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அபிராமி.

ஒரு சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு அறிமுகமான அபிராமி, 36 வயதினிலே, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கான மாறா படத்தில் நடித்துள்ளார் அபிராமி.

தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்திவரும் அபிராமி அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சாதாரணமாக ஒரு நைட்டியில் வெளியிட்ட புகைப்படம் கூட தாறுமாறாக லைக்குகளை குவித்து வருகிறது.

abirami-cinemapettai
abirami-cinemapettai
- Advertisement -