சில நடிகர்கள் 100 படம் நடிச்சாலும் முதல் படம் போல ஹிட் அமையாது.. அதுலயும் இந்த மூன்று நடிகர்கள் வேற லெவல்!

சினிமாவை பொறுத்தவரை ஒரு சில நடிகர்கள் தங்களது கேரியரில் ஏகப்பட்ட படங்கள் நடித்தாலும் அவர்களது முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பு போல மற்ற படங்களுக்கு கிடைத்திருக்காது.

அந்த வகையில் முதல் படத்தையே மாபெரும் வெற்றிப்படமாக கொடுத்த சில நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். ஆரம்பம் சரியாக இருந்தாலும் தற்போது ஃபினிஷிங் சரியில்லாத காரணத்தினால் மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வரிசையில் முதலிடத்தை பிடிப்பவர் தான் நம்ம தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் மகன் ரவிகிருஷ்ணா. செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி தான் இவருக்கு முதல் படம். அதன் பிறகு பல படங்கள் நடித்தாலும் இன்னமும் அவரை நினைவு படுத்துவது 7ஜி ரெயின்போ காலனி தான்.

அவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருப்பவர் ஜித்தன் ரமேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக தற்போது வரை வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஆர்பி சௌத்ரியின் மூத்த மகன். இவரும் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் ஜித்தன் படத்தை போல இவருக்கு வேறு எந்த படமும் அமையவில்லை என்பது சோகமான விஷயம்.

தமிழ் சினிமாவுக்கே எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தவரின் வாரிசாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விக்ரம் பிரபு. தற்போது வரை படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் கும்கி படம் போல பெரிய வெற்றிப்படம் அதன்பிறகு கிடைக்கவில்லை.

actors-1st-movies
actors-1st-movies

இதேபோல் தமிழ்சினிமாவில் முதல் படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட்டு பின்னர் மார்க்கெட் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் பல நடிகர்கள் இருக்கின்றனர். ஏன் ஹீரோவாக வெற்றி படங்களை கொடுத்து விட்டு தற்போது குணச்சித்திர நடிகராக மாறிய நடிகர்கள் எவ்வளவு பேரை தமிழ் சினிமாவில் பார்க்கிறோம்.

Next Story

- Advertisement -