ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதிக்காத 6 தமிழ் நடிகர்கள்.. இதில் 5வது நடிகரை மறந்துகூட திட்ட மாட்டாங்க!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களின் படங்களை எந்தவித விருப்பும் வெறுப்பும் இல்லாமல் மற்ற ரசிகர்களும் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட 6 நடிகர்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.

சீயான் விக்ரம்: சேது படத்தின் மூலம் தன்னுடைய வெற்றியை தொடங்கிய சீயான் விக்ரம் அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவர் அடைந்த உயரம் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இப்படி மிக வேகமாக வளர்ந்து வரும் போது ஒரு சில நடிகர்களுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் உருவாகி மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் விக்ரம் படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

கார்த்தி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருந்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து அனைவரும் விரும்பும் நடிகராக வலம் வருகிறார்.

ஜீவா: பெரிய தயாரிப்பாளரின் மகன் என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் மற்ற நடிகர்களுடன் சகஜமாக பழகுவதால் இவர் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராக மாறினார். அதுமட்டுமில்லாமல் இவரது படங்கள் எப்போதுமே ஜாலியாக இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் இவர் படத்தை பார்ப்பார்கள். இவரை வெறுக்கக்கூடிய ரசிகர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி: இன்றும் நம்ம வீட்டு பையன் போல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகராக வலம் வருகிறார். இவரது படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படி அமைவதால் இவருக்கு தனிப்பட்ட வெறுக்கக்கூடிய ரசிகர் பட்டாளம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாதவன்: தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் தனக்கென ஒரு இடம் பிடித்து தனித்துவமான நடிகராக வலம் வரும் மாதவனுக்கு, இவரை எனக்கு பிடிக்காது என்று சொல்லக்கூடிய ரசிகர்களே இல்லை என்பதுதான் உண்மை. மாதவனை மறந்தும்கூட ரசிகர்கள் திட்டமாட்டார்கள்.

அதர்வா: மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் பையன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தாலும் எந்த ஒரு பந்தாவும் காட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதால் இவருக்கு அதிக அளவில் வெறுக்கக்கூடிய ரசிகர்கள் இல்லை.

zero-haters-actors-in-tamil-cinema
zero-haters-actors-in-tamil-cinema

Next Story

- Advertisement -