எம் ஜி ஆர் க்கு பின் அரசியல் சூத்திரதாரியாக வலம் வரும் நடிகர்.. புத்துணர்ச்சியோடு தளபதி கொடுக்கும் பேராதரவு

எம்ஜிஆர் ஒரு நடிகனாய் மட்டுமல்லாது, அரசியலிலும் ஜெயித்து கோட்டையை பிடித்தார். அவர் இருக்கும் வரையில் வேறு எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வரவில்லை. இப்பொழுது எம்ஜிஆர் போலவே அரசியலில் சாணக்கியனாய் வலம் வரும் நடிகருக்கு விஜய் தனது பேராதரவு கொடுத்து வருகிறார்.

விஜய் கிட்டத்தட்ட எல்லா இடத்திலும் வெற்றி பெற்ற பிஜேபி மற்றும் தமிழகத்தில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற திமுகவிற்கும் தன்னுடைய  வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. இப்படி தளபதியை நடந்து கொள்வதிலிருந்து தன்னுடைய அரசியல் எதிரி யார் என்பதை சரியாக கணித்து வைத்துள்ளது உறுதியாகிறது.

ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு அனைத்து நடிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் விஜய் தரப்பிலிருந்து மட்டும் அவருக்கு எந்த ஒரு வாழ்த்துக்களும் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து யாருக்கு எதிராக அரசியலில் தளபதி இறங்குகிறார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

புத்துணர்ச்சியோடு தளபதி கொடுக்கும் பேராதரவு

சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் இருவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறார் விஜய். எப்பொழுதுமே ராகுல்  காந்தியின் காங்கிரஸ் கட்சி மீது விஜய்க்கு நல்ல ஒரு அபிப்பிராயம் உண்டு. இப்பொழுது ஒரு நடிகனாய் பவன் கல்யாண் அசுர வெற்றி பெற்றது அவருக்கு மிகவும் சந்தோஷம். 

ஆரம்ப காலத்தில் இருந்தே விஜய்க்கு நெருங்கிய நண்பராய்  அரசியலில் பல அடிகள் வாங்கி இன்று பிரமிக்க வைக்கும் வளர்ச்சி அடைந்து, வெற்றி பெற்றிருப்பவர் பவன் கல்யாண். இவருக்கு விஜய் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எம்ஜிஆருக்கு பின் அரசியலுக்கு வந்த அனைத்து நடிகர்களும் காணாமல் போய்விட்டார்கள்.

பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவி கூட கட்சி ஆரம்பித்தார் இன்று அந்த கட்சியே காணாமல் போய்விட்டது. ஆனால் இப்பொழுது அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று பவன் கல்யாண் பட்டையை கிளப்பி இருக்கிறார். நடிகனாக பவன் கல்யாண் வெற்றி பெற்றது, தனக்கான நம்பிக்கையின்  நட்சத்திரமாக பார்க்கிறார் விஜய். பவன் கல்யாணியின் வெற்றி அவருக்கு அசுர பலத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -