நம்பிக்கை துரோகம் செய்த விகே ராமசாமி.. சாகும் வரை குற்ற உணர்ச்சியிலிருந்து சம்பவம்!

மேடை நாடகங்களின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்து பல சாதனைகளை படைத்தவர் நடிகர் வி கே ராமசாமி. இவர் இளம் வயதிலேயே வயதான பல கேரக்டர்களில் நடித்த ஒரே நடிகர். மேலும் இவர் நடிகர் எம் ஆர் ராதாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.

பல திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். நன்றாக சென்று கொண்டு இருந்தா அவர்களுடைய நட்பில் ஒரு பெண்ணால் விரிசல் விழுந்தது. நடிகர் எம் ஆர் ராதா ஒரு பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

அந்த சமயத்தில்தான் எம் ஆர் ராதா, எம்ஜிஆருடன் இருந்த பிரச்சனையின் காரணமாக அவரை துப்பாக்கியால் சுட்டார். பல பேர் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால் அதற்கான சாட்சியங்கள் ரொம்பவும் ஸ்ட்ராங்காக இருந்தது.

எனவே அவருக்கு நான்கு வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் சில காலங்கள் சிறைக்கு செல்ல நேர்ந்தது. அவர் சிறையில் இருந்த அந்த சமயத்தை பயன்படுத்தி கொண்ட விகே ராமசாமி, எம் ஆர் ராதா உடன் தொடர்பில் இருந்த அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த செய்தி எம் ஆர் ராதா வுக்கு தெரியவந்தது. இதனால் அவர் நண்பர் வி கே ராமசாமியின் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். பின்னர் ஜெயிலில் இருந்து திரும்பிய அவர் மிகவும் ஆக்ரோஷமாக விகே ராமசாமியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் தன் நண்பரிடம் எந்த பிரச்சனையும் செய்யாமல் நல்லா இரு என்று வாழ்த்திவிட்டு வந்துவிட்டாராம்.

நண்பரிடமிருந்து கோபத்தை எதிர்பார்த்த ராமசாமிக்கு அவரது இந்த செயல் பெரிய குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர்கள் இருவரும் தங்கள் வழிகளில் பயணிக்க ஆரம்பித்தனர். சினிமாவில் பலரையும் கவர்ந்த விகே ராமசாமி தன் நண்பனுக்கு இப்படி ஒரு துரோகம் செய்தது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை