சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

டேமேஜ் ஆன பேரை காப்பாற்றி கொள்ள விஷால் போடும் திட்டம்.. சப்போர்டுக்காக விஜயகாந்தை வைத்து போடும் பிளான்

நடிகர் விஷால் ஆரம்ப காலத்தில் நடிகர்கள் அர்ஜுன் மற்றும் சரத்குமார் போன்று ஆக்சன் ஹீரோவாக ஒரு மிகப்பெரிய வெற்றி அடைவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டவர். அதேபோன்று அவர் நடித்த படங்களும் தொடர்ந்து சூப்பர் ஹிட் ஆக அமைந்தன. ஆனால் திடீரென்று அவருடைய சினிமா வாழ்க்கை மொத்தமும் அப்படியே சறுக்கி விட்டது என்று கூட சொல்லலாம். தற்போது இவருக்கு வெற்றி படம் என்று எதுவுமே கைவசம் இல்லை.

நன்றாக நடித்துக் கொண்டிருந்த இவர் திடீரென்று அரசியல் மற்றும் நடிகர் சங்கம் என்று இறங்கியதில் இருந்து இவருக்கு அடுத்தடுத்து சோதனைக்கு மேல் சோதனை தான் வந்தன. சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போனது, மாற்றி மாற்றி பேசுவது போன்று மொத்தமாக இவருடைய பெயர் சினிமாவில் மட்டுமல்லாமல் ரசிகர்களிடையேயும் டேமேஜ் ஆனது.

Also Read: விஜயகாந்த் பட ரீமேக்கில் நடித்த ரஜினி, கமல்.. மாஸ் காட்டிய வசூல்

இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் பண்ணுவதற்கு முன் வராமல் போக, இவரே சொந்த தயாரிப்பு என்று வேறு இறங்கி அதிலும் தோற்றுப் போனார். மேலும் விஷால் அவருடைய நண்பர்களை நம்பியும் மோசம் போனார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இழந்த பெயரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் இவர்.

விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவனும் இணைந்து இருக்கின்றனர். தற்போது இந்த படப்பிடிப்பில் எந்த பிரச்சனையும் கொடுக்காமல் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து வேலைகளை கரெக்டாக முடித்து விட்டுப் போகிறாராம்.

Also Read: அட்வான்ஸ் வாங்கி இரண்டு வருஷமாய் டபாய்த்த விஷால்.. தூண்டில்ல சிக்காதவருக்கு தயாரிப்பாளர் போட்ட வலை

நடிகர் சங்க தேர்தலில் களம் இறங்கிய போது இவர் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு அந்த கட்டிடத்தில் தான் தன்னுடைய திருமணம் நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன் பிறகு அதைப்பற்றி விஷால் பேசவே இல்லை. இதற்கிடையில் அவருடைய நண்பர்கள் அனைவருக்குமே திருமணமும் முடிந்து விட்டது. தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக 20 கோடி லோன் கிடைத்து விட்டதாக அறிவித்திருக்கிறார்.

இப்போது நடிகர் சங்க கட்டிடத்தின் பேச்சை ஆரம்பித்திருக்கும் விஷால் அப்படியே அந்த கட்டிடத்திற்கு முன்னாள் நடிகர் சங்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் பெயர் மற்றும் கலைஞர் கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டும் என்று வேறு சொல்லி வருகிறார். மொத்தமாக டேமேஜ் ஆன தன்னுடைய பெயரை காப்பாற்றிக் கொள்ள சில டுபாக்கூர் வேலைகளை செய்து வரும் விஷால் இப்பொழுது ரசிகர்களின் ஆதரவுக்காக விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்.

Also Read:விஷாலை நம்பி வாங்கிய பெரிய ஆப்பு.. பாட்ஷா பாய் போல் சுந்தர் சி திருப்பி கொடுத்த தரமான அடி

- Advertisement -

Trending News