மார்க்கெட் இல்லாமல் தவித்த விமல் .. அடுத்தடுத்து ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கும் 7 படங்கள்

நடிகர் விமல் பசங்க, களவாணி, கலகலப்பு, மஞ்சப்பை போன்ற ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அதிலும் களவாணி திரைப்படம் விமலுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. ஆனால் ஒரு சில வருடங்களாக விமலுக்கு சரியான படங்கள் எதுவும் அமையவில்லை. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த விமலுக்கு தற்போது கைவசம் மொத்தம் ஏழு படங்கள் இருக்கின்றன.

சண்டைக்காரி: இயக்குனர் மாதேஷ் இயக்கிய திரைப்படம் சண்டைக்காரி. இந்த படத்தில் விமலுடன் நடிகை ஸ்ரேயா சரணும் நடித்திருக்கிறார். இந்த வருடம் செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான மை பாஸ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

Also Read:இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் விமல்.. டேமேஜ் ஆன பெயரை தூக்கி நிறுத்த போட்ட பிளான்

எங்க பாட்டன் சொத்து: நடிகர் விமல், இயக்குனர் சற்குணத்துனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கும் திரைப்படம் எங்க பாட்டன் சொத்து. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியால் அறிவிக்கப்பட்டது.

மஞ்சள் குடை: இயக்குனர் சிவமணி இயக்கத்தில் விமல் நடித்த திரைப்படம் மஞ்சள் குடை. சொந்த வீடு வாங்க போராடும் ஒரு குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது.

குலசாமி: சரவண சக்தி இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் நடிகை தன்யா ஹோப் இணைந்து நடிக்கும் திரைப்படம் குலசாமி. இந்த படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்திற்கான வசனத்தை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read:சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த விமல்.. அடேங்கப்பா இத்தனை விருதுகளா!

லக்கி: இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் நடிக்கும் திரைப்படம் லக்கி. இந்த திரைப்படத்தில் விமலுடன் இணைந்து முனீஸ்காந்த் மற்றும் பால சரவணன் நடிக்கவிருக்கின்றனர் . படத்தின் முழு தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

துடிக்கும் கரங்கள்: இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடிக்கும் திரைப்படம் துடிக்கும் கரங்கள். இந்த படத்திற்கு முதலில் வெற்றி கொண்டான் என்று பெயரிடப்பட்டு பின்பு மாற்றப்பட்டது. இதில் விமலுடன் சதீஷ் மற்றும் மிஷா நரங் நடிக்கின்றனர்.

தெய்வ மச்சான்: நடிகர் விமல் நடிப்பில் வரும் 21ஆம் தேதி ரிலீசாக இருக்கும் திரைப்படம் தெய்வமச்சான். இந்த படத்தின் நேகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் பிரபல டிவி நடிகை அனிதா சம்பத்தும் நடித்திருக்கிறார். அண்ணன் தங்கைக்கு இடையேயான உறவை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read:குடி போதைக்கு அடிமையான களவாணி நடிகர்.. தொடர்ந்து பறிபோகும் சினிமா வாய்ப்பு

 

 

- Advertisement -