என்னையவா பின்னாடி தள்ளுறீங்க! விக்ரம் போட்ட போடு.. 3வது இடத்துக்கு பதுங்கி பாய்ந்த புலி

Vikram – Thangalaan: நடிகர் விக்ரமுக்கு கடந்த சில வருடங்களாகவே பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஹிட் படங்கள் என்று எதுவுமே இல்லை. 2016ல் அவர் நடித்த இருமுகன் படம் வணிக ரீதியாக வெற்றி அடைந்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து தான் பொன்னியின் செல்வன் மூலம் கம்பேக் கொடுத்தார். தற்போது அவருடைய கைவசம் ஐந்து படங்கள் இருக்கின்றன.

தமிழ் சினிமா திரையுலகில் விஜய், அஜித்துக்கு பிறகு விக்ரம் இருந்தார். அவருடைய வரிசையில் இருந்த நடிகர் தான் சூர்யாவும். இதில் விஜய் மற்றும் அஜித் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விக்ரம் கடைசியாக நடித்த தங்கலான் படத்திற்கு 22 கோடி தான் சம்பளமாக வாங்கி இருக்கிறார். இதற்கு காரணம் சில வருடங்களாக அவர் சைலன்ட் மோடில் இருந்தது தான்.

தங்கலான் படத்திற்கு சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. படத்தின் டிரைலர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. விக்ரம் சந்தோஷப்படும் அளவிற்கு படம் நன்றாக வந்திருக்கிறதாம். விக்ரம் இந்த படத்திற்காக ரொம்பவே உழைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் வேலைகள் முடியும் வரை எந்த படங்களையும் கமிட் செய்யவில்லை.

விக்ரமுக்கு தங்கலான் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் தான் வேறு எந்த படங்களையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது அவரின் உழைப்புக்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த வேலைகளும் முடிந்த பிறகு படத்தை பார்த்த விக்ரமுக்கு ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

இதனால் இத்தனை வருடங்கள் சைலன்ட் மோடில் இருந்த விக்ரம் இறங்கி அடிக்க ஆரம்பித்து விட்டார். 22 கோடியில் இருந்த தன்னுடைய சம்பளத்தை 50 கோடியாக அடுத்த படத்தில் இருந்து உயர்த்த இருக்கிறார். துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸுக்கு பிறகு 50 கோடிக்கும் மேல் அவருடைய சம்பளம் போவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

விக்ரம் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களான அருண்குமார் மற்றும் ராம் அஸ்வின் படங்களில் நடிக்க இருக்கிறார். இதில் சித்தா பட இயக்குனர் அருண்குமார், விக்ரமின் 62 வது படத்தை இயக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. அன்பறிவு படத்தின் இயக்குனர் ராம் அஸ்வின் இயக்கப் போகும் படத்தை லைக்கா ப்ரொடக்சன்ஸ் தயாரிக்க இருக்கிறதாம். இதனால் விக்ரமின் சம்பளம் 100 கோடியை தொடவும் வாய்ப்பு இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்