சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விக்ரம் நடிப்பில் வெளிவரப்போகும் 5 படங்கள்.. கேஜிஎஃப் க்கு டஃப் கொடுக்குமா தங்கலான்?

Vikram Upcoming Projects: நடிகர் விக்ரமுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இருமுகன் படத்திற்கு பிறகு பெரிய வெற்றி படங்கள் என்று எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் விக்ரம் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார். தற்போது அவருடைய கைவசம் ஐந்து படங்கள் இருக்கின்றன. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

துருவ நட்சத்திரம்: கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு இந்த படம் தூசு தட்டப்பட்டு வரும் நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரம் ஜான் மற்றும் துருவ் என்னும் இரண்டு கேரக்டரில் நடித்திருக்கிறார் . அரசாங்கத்திற்கு தெரியாமல் விக்ரம் ஒரு குழு அமைத்து தீவிரவாதிகளை அழிப்பதுதான் இந்த படத்தின் கதை.

தங்கலான்: இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படம் ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. கோலார் தங்க வயலில் வேலை செய்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி சொல்லும் படம் இது. இந்த படம் அதே கதை அமைப்போடு வந்த கேஜிஎஃப் படத்தின் வெற்றியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் வரும் குடியரசு தினத்தன்று ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கர்ணா: இயக்குனர் விமல் இயக்கத்தில் விக்ரம் கமிட்டான சூரிய புத்திர கர்ணா படம் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்தின் முன்னோட்ட காட்சிகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த படம் விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக இயக்குனர் கடந்த மாதம் அறிவித்திருக்கிறார்.

விக்ரம் 62: விக்ரம் தன்னுடைய 62 ஆவது படத்தில் இயக்குனர் அருண்குமார் உடன் இணைய இருக்கிறார். இந்தப் படத்தில் அதிகாரப்பூர்வ வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இயக்குனர் அருண்குமார் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

விக்ரம் 63: நடிகர் விக்ரமின் 62 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே 63வது படத்தின் அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஹிப் ஹாப் ஆதியை வைத்து அன்பறிவு என்னும் படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் ராம் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது.

- Advertisement -

Trending News