தளபதி வாரிசுன்னா சும்மாவா.. நடிப்பை ஓரம் கட்டி சஞ்சய் எடுத்துள்ள புது அவதாரம்

தளபதி விஜய் இன்றைய கோலிவுட் சினிமாவின் டாப் ஹீரோவாக இருக்கிறார். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கிங்மேக்கராக இருக்கிறார். இவருடைய படங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாகவே 100 கோடி வசூலை தாண்டி சாதனை புரிந்து வருகிறது.

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உண்டு. பொதுவாக ஒரு நடிகர் பிரபலமடைந்தால் அவரைச் சார்ந்த எல்லோரையுமே ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர். அப்படித்தான் தளபதி விஜய்யின் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் அவருடைய ரசிகர்கள் கொண்டாட தவறியதே இல்லை.

Also Read: லோகேஷ், தளபதி கூட்டணியை பார்த்து பயந்த 3 ஹீரோக்கள்.. இயக்குனர்களை கழட்டிவிட்ட பரிதாபம்

அதிலும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் அப்படியே அச்சு வார்த்தது போல் தன் அப்பா மாதிரி இருப்பதால் சஞ்சய் மீது விஜய் ரசிகர்களுக்கு ரொம்பவே பிரியம் அதிகம். தற்போது வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் சஞ்சய் கண்டிப்பாக சினிமாவில் ஹீரோவாக நடிப்பார் என்பது விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய கனவு.

ஆனால் சஞ்சய் தளபதி விஜய்யின் வாரிசு அல்லவா, அப்பாவை போலவே ரொம்பவும் தெளிவாக யோசித்து சினிமாவில் காய் நகர்த்துகிறார். ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் தளபதி விஜய்யின் மகன் ஹீரோவாகத்தான் வருவார் என்று பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சஞ்சய் வேறொரு முடிவு எடுத்து இருக்கிறார்.

Also Read: சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தளபதி 67 அப்டேட்.. உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா

சஞ்சய் சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என்பதில் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார். ஆனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்க போவதுமில்லை. திரைக்கு முன்னால் இல்லாமல் திரைக்குப் பின்னால் இருந்து நடிகர்களை ஒரு இயக்குனராக இயக்க வேண்டும் என்பதுதான் சஞ்சயின் தீவிர ஆசை. தன் அப்பாவை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பது அவருக்கு கனவாக இருக்கிறது.

சஞ்சயின் இந்த முடிவுக்கு மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. சமீப காலமாக பல முன்னணி ஹீரோக்களின் வாரிசுகள் சினிமாவுக்கு வந்து தோல்வியையே சந்திக்கின்றனர். சஞ்சய் ஹீரோவாக சினிமாவுக்குள் வந்து தன் அப்பாவை போல் ஜொலிக்க முடியாமல் போனால் அது விஜய் பெயரை கெடுக்கும்படி இருக்கும் என்பதால் சஞ்சய் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்.

Also Read: இந்திய அளவில் பிரமிக்க வைத்த இயக்குனர் கூட்டணியில் தளபதியின்-69.. மார்க்கெட்டை அடித்து நொறுக்கும் விஜய்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்