உச்சத்தில் கொடிகட்டி பறந்த நடிகர் விஜயன்.. சரசரவென மார்க்கெட் சரிய இந்த கெட்ட பழக்கம்தான் காரணம்

சினிமாவில் ஹீரோவை தாண்டி வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் பல நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அப்படிப்பட்டவர்களில் ரகுவரனை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஹீரோவை விட ரகுவரனின் வில்லத்தனத்தை ரசிக்க ஏகப்பட்ட கூட்டம் இருந்தது. அந்தவகையில் எண்பதுகளில் தன்னுடைய தனித் திறமையால் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு வில்லத்தனத்தில் மிரட்டியவர்தான் நடிகர் விஜயன்.

மலையாள நடிகரான இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். முதலில் சின்ன சின்ன படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை உச்சத்திற்கு ஏறியது பாரதிராஜாவின் படங்கள் தான். அதுவும் ரமணா படத்தில் இவர் நடித்த ‘ஜூம் பண்ணு, நோ’ என்ற காட்சியை இப்போதும் பல மீம்ஸ்களில் பார்த்து வருகிறோம்.

இப்படி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பரபரவென பல படங்களில் நடித்து வேகமாக உயர்ந்து கொண்டே இருந்த நடிகர் விஜயன் திடீரென தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் தடுமாறியதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது.

அதில் ஒன்று அவரது குடிப்பழக்கம் தான். காலை உணவு உண்பதற்கு முன்பு சரக்கு அடிக்கும் பழக்கம் கொண்டவராம். 24 மணி நேரமும் சரக்கும் கையுமாக அலைந்தாராம். ஆனால் தண்ணி அடித்தால் மட்டும் தான் நல்ல நடிப்பை வழங்க முடியும் என்ற நம்பிக்கை குறைந்து விட்டதாக கூறுகின்றனர்.

அதுவே அவரது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு விஜயன் இயற்கை எய்தினார். விஜயன் நடித்த படங்களில் பிடித்த படம் மற்றும் கதாபாத்திரம் என்ன என்பதை ரசிகர்கள் கமெண்ட்டுகளில் பதிவு செய்யலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்