ஜவானால் தளபதி விஜய்க்கு ஏற்பட்ட சிக்கல்.. வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட படம்

கடந்த சில தினங்களாக சமூகவலைத்தலங்களில் தளபதி 68 என்னும் ஹேஸ்டேக் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் விரைவில் முடிவடைய இருக்கிறது. படமும் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக போகிறது.

இதனால் தற்போது விஜய் ரசிகர்களுக்கு அவருடைய அடுத்த படம் எந்த இயக்குனருடன் பண்ண போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. ஒவ்வொருவரும் தளபதி அடுத்து யாருடன் இணைய வேண்டும் என்ற தங்களுடைய ஆசைகளை சொல்லி வருகின்றனர். சமீபத்தில் கிராக், வீரசிம்மா ரெட்டி போன்ற படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வேறு விஜய்க்கு கதை சொல்லியிருக்கிறார்.

Also Read:சிந்தாமல் சிதறாமல் வசூலை தட்டித் தூக்கம் 5 டாப் நடிகர்கள்.. பக்கா பிளான், அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் 5 படங்கள்

ஆனால் தளபதி விஜய் ரசிகர்களுக்கு அவர் இயக்குனர் அட்லீயுடன் இணைய வேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது. அதிலும் இவர்கள் இருவரது கூட்டணியில் வெளியான பிகில் படத்தில் வரும் ராயப்பன் கேரக்டரை வைத்து முழுப்படம் பண்ண வேண்டும் என்று அட்லீயிடம் டுவிட்டர் மூலம் சொல்லியிருந்தனர்.அவரும் அதற்கு ஓகே சொல்லியிருந்தார்.

விஜய்யின் 68ஆவது படத்தை பெரும்பாலும் அட்லீ தான் இயக்குவார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் இருந்தது. ஆனால் அதற்கு மிகப்பெரிய தடையாக இப்போது ஜவான் படம் இருக்கிறது. அட்லீ பிகில் திரைப்படத்தை முடித்த கையோடு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இந்த படத்தை தொடங்கினார்.

Also Read:விஜய்காக வரிசை கட்டி நிற்கும் 6 இயக்குனர்கள்.. அட்லீக்கு கொடுத்த அல்வா!

கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகியும் இந்த படம் முடிந்தபாடில்லை. படத்தை பற்றி எந்தவித சமீபத்திய அப்டேட்டுகளும் இல்லை. ஜவான் படத்தை முடிக்காமல் அட்லீயால் அடுத்த படத்தை தொடங்க முடியாது. இதனால் விஜய்யும், அட்லீயும் இணைவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை. இருந்தாலும் அட்லீ விஜய் அடுத்து நடிக்க வேண்டிய படத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

அதாவது மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஆர் பி சவுத்ரி இருவரும் இணைந்து அடுத்த விஜய் படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். விஜய் மற்றும் அட்லீ இருவரும் பேசிய பின்பு தான் விஜய் இந்த படத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய அப்டேட்டுகள் விரைவில் வெளிவர வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Also Read:பாலகிருஷ்ணாவாக மாறப்போகும் விஜய்.. பணத்தாலேயே அடிச்சு வாய்ப்பு வாங்கிய தயாரிப்பாளர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்