இந்திய அளவில் பிரமிக்க வைத்த இயக்குனர் கூட்டணியில் தளபதியின்-69.. மார்க்கெட்டை அடித்து நொறுக்கும் விஜய்

நடிகர் விஜய்யின் நடிப்பில் சமீபத்தில் வாரிசு திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக ரிலீஸ் ஆனது. பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் விஜய் ரசிகர்கள் இன்று வரை இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் எதிர்பார்த்த அளவுக்கு பேசப்படவில்லை என்றாலும் பொருளாதார ரீதியாக தேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த சில பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் தனிக்காட்டு ராஜாவாக வெற்றி கண்டவர் தளபதி விஜய். ஆனால் இந்த வருடம் அவருக்கு அப்படி அமையவில்லை. அவரே எதிர்பார்க்காத விதமாக நடிகர் அஜித், விஜய்க்கு போட்டியாக எட்டு வருடம் கழித்து நேரடியாக களத்தில் குதித்தார். இது விஜய்க்கு சற்று ஆட்டம் கண்ட நிலைமை தான்.

Also Read: ஸ்டைலிஷ் இயக்குனரிடம் திருப்பாச்சி மாதிரி கதையைக் கேட்ட விஜய்.. உன் சவகாசம் வேண்டாம் என கிளம்பிய பிரபலம்

வாரிசு படத்தை முடித்த கையோடு தன்னுடைய வெற்றி பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைந்து விட்டார் விஜய். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், நடிகர் அஜித் ஒரு பக்கம் அவருடைய அடுத்தடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட ஆரம்பித்து விட்டார்.

இதற்கு இடையில் விஜய்யும் அஜித்துக்கு போட்டியாக அடுத்தடுத்து வேலைகளில் இறங்கி இருக்கிறார். தளபதி 67 உருவாகிக் கொண்டிருக்கும் போதே, தளபதி 68 படத்தை அவருடைய ஆஸ்தான இயக்குனர் அட்லி இயக்குவதாக கடந்த வாரம் தான் பரபரப்பான தகவல்கள் வெளியானது. அதற்குள் தளபதி 69 பற்றியும் அப்டேட் வர ஆரம்பித்துவிட்டது.

Also Read: ரிப்பீட் மோடில் வாரிசின் ஜிமிக்கி பொண்ணு பாடல்.. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ

ஏற்கனவே தெலுங்கு படம் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்த விஜய், தற்போது கன்னட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் தன்னுடைய 69ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். பிரஷாந்த் நீல் தான் மிகப்பெரிய வெற்றிப்படமான கே ஜி எஃப் படத்தை இயக்கியவர். இவருடைய இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது தளபதி 69.

தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ரிலீசான சமயத்தில் கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனதால் விஜய்யின் படமே சற்று ஆட்டம் கண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெற்றியை குறியாய் வைத்திருக்கும் விஜய் பிரசாந்த் நீலுடன் இணைய இருக்கிறார். இப்படி நடிகர்கள் அஜித்தும், விஜய்யும் மாறி மாறி அப்டேட் கொடுத்து வருவது அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: விஜய்யுடன் 15 வருட பகை.. நக்கலாக குத்தி காட்டிய நெப்போலியன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்