விஜய்காக வரிசை கட்டி நிற்கும் 6 இயக்குனர்கள்.. அட்லீக்கு கொடுத்த அல்வா!

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் மாதம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் விஜய் இயக்குனர்களை லாக் செய்து வைத்துள்ளார். அடுத்து மூன்று வருடங்களுக்கு பிசியாக அளவிற்கு ஆறு இயக்குனர்களை புக் செய்து வைத்துள்ளார்.

கோபிசந்த் மலினேனி : விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்த நிலையில் மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்க இருக்கிறார். பாலகிருஷ்ணாவின் வீரசிமா ரெட்டி படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தளபதி அடுத்ததாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : பாலகிருஷ்ணாவாக மாறப்போகும் விஜய்.. பணத்தாலேயே அடிச்சு வாய்ப்பு வாங்கிய தயாரிப்பாளர்

வினோத் : அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான வினோத் விஜய்யுடன் படம் பண்ண ஆர்வமாக இருப்பதாக பலமுறை கூறியுள்ளார். மேலும் விஜய்க்காக அவர் ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துள்ளாராம். ஆகையால் வருகின்ற இரண்டு ஆண்டுக்குள் வினோத்துடன் விஜய் கூட்டணி போடுவது உறுதியாகியுள்ளது.

ஷங்கர் : விஜய், ஷங்கர் இருவரும் நண்பன் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் இதே கூட்டணி இணைய உள்ளது. இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் ஷங்கர் பிஸியாக உள்ள நிலையில் இதை அடுத்த விஜய்யின் படத்தை இயக்க உள்ளார்.

Also Read : சர்வதேச அளவில் பெருமைப்படுத்திய இயக்குனர்.. விஜய் சேதுபதிக்கு போட்ட எண்ட் கார்டு

அட்லீ : விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லி தளபதி 68 படத்தை இயக்குவதாக இருந்தது. இப்போது ஜவான் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டு போவதால் அட்லிக்கு விஜய் அல்வா கொடுத்துள்ளார். அதாவது விஜய்யின் 70 அல்லது 71வது படத்தை தான் அட்லீ இயக்க அதிக வாய்ப்பு உள்ளது.

வெற்றிமாறன் : விடுதலை என்ற மாபெரும் வெற்றி படத்தை வெற்றிமாறன் கொடுத்துள்ளார். மேலும் விஜய், வெற்றிமாறன் கூட்டணி இணைய உள்ளதாக பல வருடங்களாக பேச்சு நடந்து வருகிறது. இந்த சூழலில் வாடிவாசல் பணத்திற்கு பிறகு விஜய் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார்.

மணிரத்னம் : பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட நாவலை படமாக எடுத்துள்ள மணிரத்னம் விஜயுடன் இணைய ஆர்வமாக உள்ளார். உலக நாயகன் கமலஹாசன் படத்தை இயக்க மணிரத்தினம் அதற்கு அடுத்தபடியாக விஜய்யின் படத்தை இயக்கவிருக்கிறார்.

Also Read : சிவாஜியை பாலோ செய்த விஜய்.. இயக்குனரையே ஆச்சரியப்படுத்திய சம்பவம்

- Advertisement -