ரசகுல்லா நடிகையுடன் உறுதியான நிச்சயதார்த்தம்.. வெளிச்சத்திற்கு வந்த விஜய் தேவரகொண்டாவின் மன்மத லீலை

Actor Vijay deverakonda and famous actress getting engaged soon: வசீகர தோற்றத்துடன் தமிழ் தெலுங்கு என இரண்டிலும் அதிக பெண் ரசிகர்களை கொண்டுள்ள விஜய் தேவரகொண்டாவின் பேச்சிலர் லைஃப்க்கு எண்டு கார்டு போட அச்சாரம் போடப்பட்டுள்ளது. ஆம் விஜய் தேவரகொண்டா, பிரபல முன்னணி நடிகையை ஒருவரை காதலித்து வந்தார் இரு விட்டார் சம்மதத்தோடு காதலியை கரம் பிடிக்க உள்ளார்.

ஏற்கனவே பேட்டி ஒன்றில் நிருபர், உங்களது திருமணம் காதல் திருமணமா? என்று கேட்டதற்கு பெற்றோர் மற்றும் இரு வீட்டாரின் சம்மதத்துடனே திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக கூறினார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளிவந்த குஷி காதலுக்கு பின் உள்ள கதையை மென்மையாக சொன்னது.

காதலை மென்மையாக சொல்லும் இந்த மெல்லிய ஆண்மகன் நிச்சயிக்கப்பட்ட அந்த நடிகையுடன் ஏற்கனவே டேட்டிங்கில் இருந்ததாக கூறப்படுகிறது.  பண்டிகையின் போது தவறாது அட்டனன்ஸ் போடும் விஜய் தேவரகொண்டாவை, பெண்ணின் வீட்டாருக்கு பிடித்து போய் உள்ளதால் பிப்ரவரி முதல் இரண்டு வாரங்களில் நிச்சயதார்த்தம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read:நானும் உறவில் இருக்கிறேன், ராஷ்மிகா முன்னாள் காதலனின் புகைப்படம்.. கடுப்பில் விஜய் தேவரகொண்டா

இந்த இளம் புயலை கட்டி போட உள்ள ராட்சசி யார் என்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி என பல மொழிகளிலும் குயின் ஆக உள்ள ராஷ்மிகா மந்தனா தான்.  கீதகோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் தன்னுடன் ஜோடி சேர்ந்த ராஷ்மிகாவை திருமணம் செய்ய உள்ளார் விஜய் தேவரகொண்டா.

சுல்தான் வாரிசு படங்களின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனாலும்  இந்த படங்களுக்கு முன்பே இன்கேம் இன்கேம் கவாலே பாடலின் மூலம் தமிழகத்துக்கு பரவலாக பரிச்சயமானார் ரஷ்மிகா மந்தனா. “நண்பனை எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமா?” என்று ஜோடி போட்டு  உள்ளனர் இந்த  டோலிவுட் ஜோடிகள்.

இணையத்தில் இவர்களின் நிச்சயதார்த்த தகவல் வேகமாக வைரலாகி வந்த நிலையில் இவர்களின் நெருக்கமான வட்டாரங்கள் சிலரோ இந்த தகவல் உண்மை இல்லை என்று குண்டை தூக்கி போட்டு உள்ளனர். விஜய் தேவரகொண்டாவோ சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாவில் ஆண் பெண் கைகள் கோர்த்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு விரைவில் அறிவிக்கிறேன் என்று சூசகமாக தெரிவித்து இருந்தார். விஜய்க்கு முன்னேற்பாடாக வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு விரைவில் அதிகாரப்பூர்வமாக தகவல் வரலாம் என எதிர்பார்ப்போம்.

Also read: சமந்தாவுடன் லிப் லாக் செய்து வெறுப்பேற்றிய விஜய் தேவரகொண்டா.. பழிக்கு பழிவாங்கிய ராஷ்மிகாவின் போஸ்டர்