வெங்கட் பிரபு மண்டைய உடைக்க காத்திருக்கும் கல்பாத்தி சகோதிரிகள்.. விஜய், வெங்கட் பிரபு வைரல் போட்டோஸ்

Thalapathy Vijay: நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் GOAT படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்து முதன் முதலில் ரிலீஸ் ஆகப்போகும் படம் என்பதால் இதன் மீது எல்லோருக்குமே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தாய்லாந்து, கேரளா, ரஷ்யா துபாய் என பல இடங்களிலும் படபிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் தவமாய் தவம் கிடக்கிறார்கள்.

விஜய் படம் என்றாலே எப்போதுமே சுட சுட அப்டேட் வருவது என்பது எப்போதும் நடக்கும் விஷயம் தான். ஆனால் GOAT படத்தின் அப்டேட் கொஞ்சம் ஸ்லோவாக தான் இருக்கிறது. பிரபுதேவா மற்றும் பிரசாந்த் பிறந்த நாளுக்கு பட குழுவினர் வாழ்த்துக்கள் மட்டும்தான் தெரிவித்திருக்கிறார்கள்.

அப்டேட் எதுவும் வெளியாகாததால் படத்தின் வியூகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஏக்கத்தை போக்குவதற்காக விரைவில் படக்குழு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிட இருக்கிறது.

இதற்கிடையில் நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜய் படப்பிடிப்பிற்காக ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறார். இதற்காக அவர் ஏர்போர்ட் வந்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது எல்லோருக்குமே தெரியும்.

விஜய், வெங்கட் பிரபு வைரல் போட்டோஸ்

அதற்கு முன்பு அவர் சாய்பாபா கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு உள்ளவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் வெங்கட் பிரபு தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

அதில் கல்பாத்தியின் மகள்களான அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஐஸ்வர்யா கல்பாத்தி வெங்கட் பிரபுவை தலையில் அடிப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது. இது ஜாலிக்காக எடுக்கப்பட்ட போட்டோ என்று பார்க்கும்போதே தெரிகிறது.

GOAT படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ரஷ்யாவில் படத்தை முடிக்கிறார்களா அல்லது மீண்டும் பட குழு சென்னைக்கு வந்து படப்பிடிப்பு நடத்தப்படுமா என்பது இனி தான் தெரியும்.

நடிகர் அஜித்குமாருக்கு மங்காத்தா என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்தது போல் விஜய்க்கு இந்த படம் ஹிட் படமாக இருக்க வேண்டும் என்பதுதான் விஜய் ரசிகர்களின் பெரிய ஆசையாக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்